அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2020

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் விழாவில் பங்கேற்க நேற்று ( 07-11-2020 ) மதுரைக்கு வருகைபுரிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு K.A.செங்கோட்டையன் அவர்களிடம் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் தங்களது TET விலக்கு தொடர்பான கோரிக்கைகளை, நினைவூட்டல் மனுவாக முன்வைத்தனர்.


அதன்படி, ஏற்கனவே TET நிபந்தனைகளுடன் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணியில் உள்ள ஆசிரியர்களைக் காத்து, அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்காதபடி தாய்மை உள்ளத்துடன் தற்போதைய அம்மா அரசு என்றும் துணை நிற்கும் என ஏற்கனவே தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உறுதியளித்தையும் அவர்கள் அமைச்சரிடம் நினைவூட்டினர்


23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் TET நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெற்றவர்களுக்கு 16/11/2012 க்குப் பிறகே முன்தேதியிட்டு TET கட்டாயம் என்ற நிபந்தனைகளுக்குக் கீழே இந்த வகை ஆசிரியர்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றமும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாதவாறு முடிவுகளை எடுக்க ஏற்கனவே பலமுறை தமிழக அரசினை அறிவுறுத்தியும் உள்ளது.


ஆகவே 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதுமாக விலக்கும், அதற்கு மாற்றாக புத்தாக்கப் பயிற்சியும் அளிக்க பலமுறை வேண்டுகோள்கள் விடுத்து வந்தோம். எங்கள் நியாயமான கோரிக்கையை கருணை உள்ளத்தோடு இந்த தமிழக அரசு நிறைவேற்றித்தரும் என்று எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் K.சிவஞானம், சந்ரு, பூபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த கோரிக்கை அடங்கிய மனுக்கள், அவ்விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழக வருவாய் / பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ஆர். பி. உதயகுமார் அவர்கள் மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். எஸ். சரவணன் ஆகியோரின் மேலான கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.


12 comments:

  1. https://youtu.be/98iVZb0GfXc
    ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பது 2021 நல்ல ஆண்டாக அமையுமா

    ReplyDelete
  2. த‌ய‌வு செய்து குறைந்த‌ப‌ட்ச‌ த‌குதி ம‌திப்பெண்க‌ளையாவ‌து எடுக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்...அனைத்து ஆசிரிய‌ர்க‌ளுக்குமே குறிப்பிட்ட‌ கால‌ இடைவெளியில் அவ‌ர்க‌ளின் தகுதியை சோதிக்கும் வ‌கையில் தேர்வுக‌ள் ந‌ட‌த்துவ‌து ப‌ற்றி அர‌சு ப‌ரிசீல‌னை செய்ய‌லாம்...

    ReplyDelete
  3. TET தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் ஏமாளிகள்.

    ReplyDelete
    Replies
    1. Yenda oru tet la ne pass panita yedho collector exam pass panitadhu pola kudhikara tecaher department la matudhanda anna yepa savan dhinna yepa kali agum nu nikariga dr and nurses ku kuda dha mrb nu iruku yeda idhuku munadi work pandra dr la mrb yeludhunagala ipo work pandra teachers avagaluku yena rules oh adha follow pani posting poirukaga avaga yedho kekaraga unaku ipo adhula prachana neye unga school teacher soilikuduthutha tet la pass panirupa ne pass pana avaga soilikudutha padam dha reason ne pass panitu vandhu avaga jonkey ulavaipa.

      Delete
    2. இவ்ளோ மானமும், ரோஷமும் உள்ளவன், எளிமையாய் இருந்த tet தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது தானே,

      Delete
    3. Tet pass panita nee velatharaya yenaku yena na M.E mudichitu company la manager ah Iruka ne teacher vela thariya

      Delete
    4. Comment podrava la teacher ah dha irukanuma andha knowledge kuda illa nela yepadi tet pass pana

      Delete
    5. நிதிஉதவி மற்றும் சிறுபான்மையினரின் பள்ளியில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களும் 8லட்சம் முதல் 20லட்சம் வரை லஞ்சம் குடுத்து பணியில் சேர்ந்தவர்கள், இப்பள்ளிகளில் இந்திய அரசியல் அமைப்பு மக்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீடு பயன் படுத்துவதில்லை, சட்டத்தை மதிக்காதவர்களுக்கு,அரசு சமபளத்துக்கு எதற்கு ஆசை படுனும்,4 முறை அரசு tet தேர்வு வைத்தும் உங்களால் தேர்ச்சி பெற முடியவில்லை, தமிழக முதலமைச்சரின் நேற்றைய பேட்டி பாக்கணும், 7.5%மருத்துவ இட ஒதுக்கீடு இவர்களுக்கு செல்லாது,நிதிஉதவி மற்றும் சிறுபான்மையினரின் பள்ளிகள் தனியார் பள்ளிகளாக கருதப்படும், தனியார் பள்ளிக்கு சொம்பு தூக்கற,

      Delete
  4. Pls help panuga sir part time teachers ku

    ReplyDelete
  5. Paper-2 science subjects ல எந்த வருசம் test easy ஆ இருந்து சொல்லுங்க.maths PG முடிச்சவங்க எப்படி zoology botany questions atten பண்ண முடியும்.22 to 23 age la current ல முட்டிச்சவங்க வேணும்னா ..ok மீதமுள்ளவங்க....?

    ReplyDelete
  6. கல்வி செய்தி தளத்தில் வரும் unknown நபர்களை நீக்க வேண்டுகிறேன். பெயர் சொல்லாத நபர்கள் கருத்து தேவையா? கல்வி செய்தி கவனிக்குமா?.

    ReplyDelete
  7. 2012,2013,2017....மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற்று பணி கிடைக்கவில்லை......இந்த அவலம் வேறு எங்கும் இல்லை.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி