தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர TNPSC-க்கு நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2020

தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர TNPSC-க்கு நீதிமன்றம் உத்தரவு.

 


நீதிமன்றத்துக்கு சரியான தகவல் தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் வழியில் பயின்று 20% இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர உத்தரவிடப்பட்டுள்ளது.


முழு விவரங்களை டி.என்.பி.எஸ்.சி தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 20% இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்தால் தமிழ் வழியில் பயின்றவர்கள் நிலை என்ன? எனவும் வினவியுள்ளது.


தொலைதூர கல்வியில் படித்து பணிக்கு சேர்ந்தவர்களின் முழு விவரங்களை சரியான தகவல்களாக தர வேண்டும். விவரங்களை தரவில்லை எனில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உட்படுத்த நேரிடும் என்று உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

25 comments:

  1. சரியான தீர்வை நோக்கி..... தமிழ் இட ஒதுக்கீடு 20% நேர்மையாக ...... வழங்கப்படட்டும்......

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்களுக்கு(தமிழ் வழியில் உள்ளவர்கள்)இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை

    ReplyDelete
  3. In physical education no tamil medium, some of get illagely in pstm certicate, and produce trb also accept

    ReplyDelete
    Replies
    1. இதற்கெல்லாம்(இந்த ஏமாற்று பேர்வலிகள் மற்றும் உதவியவர்கள்) தேர்வுவாரியம் தண்டனை அறிவித்து நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதே தற்போதைய தேவை..

      Delete
  4. Yaraga irunthalum thappu seithavargal oru nal thandanaya anubavika vendum

    ReplyDelete
  5. ஓவிய கல்லூரியில் படித்தவர்கள்,,, நான்கு ஆண்டும் தமிழ் வழியில் தான் பயின்றவர்கள்,,,,,கலை வரலாறு என்று தனி பாடம் தமிழில் உள்ளது,, ,அப்படி தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சான்றிதழ் இருந்தும் சிலருக்காக பணி வழங்காமல் இருப்பது நல்லது இல்லை,,,,ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்கள் அனைவரும் நல்லவர்கள்,,,,,நேர்மைக்காக போராடும் நீங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு கால தாமதம் இன்றி விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  6. Special teacher pending posting fill pannunga

    ReplyDelete
  7. Genuine vangi tamil medium posting podunga

    ReplyDelete
  8. தொலைதூர கல்வி மூலம் பட்டம் பெற்றவர்கள் பற்றி ஏன் கேட்கிறார்கள்

    ReplyDelete
  9. ஆசிரியர் கற்று கொடுத்தது தமிழ் வழியாகவா ஆங்கில வழியாகவா என்று கேட்கிறார்கள்,அப்படி கேட்கும் போது. வீட்டில் இருந்த படி கற்கும் போது எப்படி தமிழ் வழி இடம் பெற முடியும்,,,,,so regular la padichavanga eligible ok v sir,,,,,தொலை தூரமாக கற்றவர்கள் general list la vara vendum

    ReplyDelete
    Replies
    1. தொலைதூரக்கல்வியில் BA Tamil and தமிழ் இலக்கியம் படித்தால் அது ஆங்கிலவழியாகுமோ?
      தவறாக கூறவேண்டாம்.
      ஆய்விற்காக நீதியரசர்கள் கேட்டிருக்கலாம்.

      Delete
    2. படித்தது தமிழா ஆங்கிலமா என்று கேட்க வில்லை,,,,,ஆசிரியர் கற்பித்தது ஆங்கிலமா தமிழா என்று தான் கேட்கிறார்கள்

      Delete
    3. கற்பித்தது எனக்கு புரியவில்லை...உங்களை கல்லூரியில் நேரில் பார்த்து ஆசிரியர் சொல்லிக்கொடுத்தால் மட்டுமே கற்பித்தல் ஆகுமோ?
      தற்போது இணையத்தில் வகுப்பு நடக்கிறது ...நண்பா.

      Delete
    4. தமிழை ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்... ஒரு பாடம் ஆங்கிலமும் இருக்கிறது என்று கூறவிழைகிறீரோ?

      Delete
    5. தமிழ் வழிக் கல்வி என்று எதைக்கூறுவீர்? அரசு பள்ளியில் தமிழ்வழியில் படிப்பதையா? தொலைநிலைக் கல்வியில் தமிழில் படித்து பட்டம் பெறுவதையா?

      Delete
    6. இனணயத்தில் கற்பது தற்போது தான் வந்தது,,,,தமிழ் வழி என்பது தினமும் கல்லூரி மற்றும் பள்ளி இரண்டு இடத்திலும் ,,,எழுத்து முறை படியும்,,,,,ஆசிரியரிடமும் கற்றதும் தமிழ் வழியாக இருக்க வேண்டும்

      Delete
    7. இணையத்தில் கற்பது ஆங்கிலத்தில் வழியாகவா தமிழ் வழியாகவா என்று நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்

      Delete
  10. பல ஏழைகள் மக்கள் வேலைக்கு சென்று கொண்டு தன் குடுப்பதையும் பார்த்துக்கொண்டு படிப்பவர்கள் முட்டாள் அல்ல கடைசி tnpsc குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த பெண் BA தமிழ் தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர் DSP யாக பணியமர்த்த பட்டவர் திருமணம் ஆகி தன் கணவர் குடுப்பதில் படித்து சாதனை படைத்துள்ளார், அந்த பெண் முட்டாள்
    அ ?. தொலைதூர கல்விக்கு எந்த ஓதுக்கீடும் இல்லை என்றால், UGC தொலைதூர கல்வியை அனுமதிக்க கூடாது, கல்லூரி சென்று படிப்பவர்களெல்லாம் அறிவாளிகளும் அல்ல தொலைதூரத்தில் படிப்பவர்களெல்லாம் முட்டாள்களும் அல்ல..

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு இட ஒதுக்கீடு இல்லாமல் இல்லை,,,தமிழ் இட ஒதுக்கீடு 20% இதில் மட்டும் இடமில்லை என்று தான் குறிப்பீட்டு உள்ளார்கள்

      Delete
  11. தமிழ் பாடத்தை தமிழில் தான் கற்க முடியும்,,,ஆங்கில பாடத்தை ஆங்கிலத்தில் தான் கற்க முடியும்,,,,,ஆனால் கணிதம், அறிவியல்,,,சமுக அறிவியல் எல்லாம் ஆங்கிலத்திலும் கற்க முடியும்,,,,தமிழிலும் கற்க முடியும் ,,,,,,,தமிழ் வழி இட ஒதுக்கீடு என்பது ஆங்கிலம் மற்றும் தமிழை தவிர்த்து மற்ற பாடங்களை தமிழ் வழி கற்றவங்களுக்கு 20% இட ஒதுக்கீடு அனுமதி உண்டு

    ReplyDelete
  12. தமிழ் வழி பயின்றவர் சான்று பள்ளியிலிருந்து பெறப்படுகின்றது. எனவே அது கல்லூரிக்கு பொருந்தாது நீட் இட ஒதுக்கீடு போன்று

    ReplyDelete
    Replies
    1. கல்லூரியிலும் இருக்கிறது,,,trb,,,tnpsc than keturukanga,,,,

      Delete
  13. நான் Bsc விலங்கியல் தமிழில் தான் தேர்வு எழுதினேன் தமிழில் தான் படித்தேன் ஆனால் ஆங்கில கல்வி என்கிறார்கள் நான் pstm சான்றிதழ் வாங்க முடியுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி