TRB - போட்டித்தேர்வு மூலமாகவே இனி ( SGT / BT ) ஆசிரியர் பணி மற்றும் TET சான்றிதழ் காலம் நீட்டிப்பா ? CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2020

TRB - போட்டித்தேர்வு மூலமாகவே இனி ( SGT / BT ) ஆசிரியர் பணி மற்றும் TET சான்றிதழ் காலம் நீட்டிப்பா ? CM CELL Reply.

 


அய்யா வணக்கம்.நான் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 0.11 வெயிட்டேஜ் வித்தியாசத்தில் பணி வாய்ப்பினை இழந்தவன்.எங்களுக்கு பணி வழங்குவதாக ஒரு நான்கைந்து ஆண்டுகளாக தினந்தோறும் அறிக்கை விட்டு எங்களை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியிலே வைத்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அய்யா திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவ்த்துக்கொள்கிறோம்.அய்யா அவ்வாறு சொல்லாமல் இருந்திருந்தால் நான் கூட தற்கொலை செய்திருப்பேன் . இன்றைய தேதி வரையிலும் நாங்கள் உயிரோடு இருப்பதற்கு அய்யா அவர்களே காரணம்.எங்களுக்கு அடுத்து அமையவிருக்கும் தி.மு.க. ஆட்சியில் 80000 தகுதிதேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பணி வழங்கப்படும் என்ற உறுதியினை மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.ஆனால் எங்களது தகுதித்தேர்வு சான்றிதழ் காலாவதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.காலாவதியான தகுதிதேர்வு சான்றிதழை வைத்து எப்படி பணி வழங்குவார்கள் எனத் தெரியவில்லை.ஆகவே எங்களது தகுதிதேர்வு சான்றிதழின் கடைசி நாள் எது என்பதைத் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


CM CELL Reply :



நிராகரிக்கப்பட்டது . ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையிலுள்ள விதிகளின்படியே தெரிவு பணிகளை மேற்கொள்ளுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் படி SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் தற்போது உள்ள அரசாணையின்படி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். எனினும் சான்றிதழ் தகுதி சார்ந்து வேறு அரசாணை வெளியிடப்படின் உரிய தகவல் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் கனிவுடன் தெரிவிக்கலாகிறது . ஆதேவா.ஓ.மு.எண் 5305.இ 4.2020 , நாள் : 31.10.2020

14 comments:

  1. Ippadiyum oruvaradhu vedhanayai velippadutha mudiyumaa?🤔
    Vanjappugazhchi ani
    Sirappu.👌👌👌

    ReplyDelete
  2. கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லும் என்று இது நாள் வரை கூறி வருகிறார்.அவர் வாய்மொழியாக கூறுவதை விட அரசாணை வெளியிட்டு செயல்படுத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும்.

    ReplyDelete
  3. கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லும் என்று இது நாள் வரை கூறி வருகிறார்.அவர் வாய்மொழியாக கூறுவதை விட அரசாணை வெளியிட்டு செயல்படுத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும்.

    ReplyDelete
  4. Syllabus Enna nu government me theriyadhu.enga exam vaikaradhu.

    ReplyDelete
  5. PG-TRB CHEMISTRY
    KRISHNAGIRI

    Online classes

    Admission going on...

    Fully Short cut Methods
    Complete syllabus study Materials
    Chapterwise Q & A
    Online Live doubt clearness sessions
    Hand Written Materials
    100% result Oriented teaching

    Study Material available

    What's App
    9489147969

    KRISHNAGIRI

    ReplyDelete
    Replies
    1. கொசு தொல்லை தாங்க முடியல இது போன்ற விளம்பர பதிவுகளை ௨டனடியாக நீக்கவும்

      Delete
  6. TET mark+Employment seniority la posting potta yaarum paathikka pada maatanga...

    ReplyDelete
  7. Kulukkal muraibest. Or kalil vizhuvathu best.

    ReplyDelete
  8. முருகன் அவர்களே மன வேதனை வேண்டாம் PG TRB எழுதவும் நண்பரே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி