நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும், 5.45 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 215 கோடி ரூபாய் செலவில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி., துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்க, மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியர் அனைவருக்கும், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், 2001 - 2002ம் கல்வியாண்டில், ஜெயலலிதாவால் துவக்கப்பட்டது.கடந்த, 2005 - 06ம் கல்வியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், அனைத்து பிரிவு மாணவ - மாணவியருக்கும், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நடப்பு கல்வியாண்டில், 2.38 லட்சம் மாணவர்கள், 3.07 லட்சம் மாணவியர் என, மொத்தம், 5.45 லட்சம் மாணவ -- மாணவியருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டத்தை, நேற்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து, ஒன்பது மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை வழங்கினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், ராஜலட்சுமி, வளர்மதி, தலைமை செயலர் சண்முகம் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி