தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2021 ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/2020
நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்
பணியிடம்: நாகப்பட்டினம்
பணி: உதவிப்பேராசிரியர்
காலியிடங்கள்: 22
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Aquaculture - 07
2. Fish Processing Technology - 02
3. Fishing Technology and Fisheries Engineering - 03
4. Aquatic Environment Management - 03
5. Fisheries Biology and Resource Management - 03
6. Fish Pathology and Health Management - 02
7. Fisheries Extension - 01
8. Fisheries Economics - 01
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் B.F.Sc. முடித்து முதுகலை பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை நிதி அலுவலர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 என்ற பெயரில் நாட்டுமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து பெறப்பட்ட, நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2021
மேலும் விவரங்கள் அறிய
https://www.tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20AP%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி