10 கல்விஆண்டு ஆகிறது, பணிநிரந்தரம் எப்போது? கவலையில் பகுதி நேர ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2020

10 கல்விஆண்டு ஆகிறது, பணிநிரந்தரம் எப்போது? கவலையில் பகுதி நேர ஆசிரியர்கள்!


தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றி கொடுக்க,  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை.


இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் அறிக்கையில் கூறியது :-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012 ஆம் ஆண்டு 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார்.

உடற்கல்வி ஓவியம் கணினிஅறிவியல் தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி வருகிறோம்.

சட்டசபையில் 2017 ஆம் ஆண்டே  பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வாக்குறுதி அளித்து இருந்தார்.

எனவே சட்டசபை அறிவிப்பை நடைமுறைப்படுத்தி, ரூபாய்  7700/- குறைந்த தொகுப்பூதியத்தோடு,  தற்போதுள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம்.

இதில் மாற்றுத்திறனாளிகள், விதைவைகள் மற்றும் ஏழை விவசாய மக்கள் பெரும்பாலும் உள்ளார்கள். 

எனவே அனைவரின் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் குறித்து கருணையுடன் மனிதநேயத்துடன் ஆளும் அதிமுக அரசு நல்லதொரு முடிவை அரசாணையாக வெளியிட வேண்டுகிறோம். 

வருகின்ற ஜனவரி மாதம் சட்டசபை கூட உள்ளது. 

இடைக்கால பட்ஜெட் படிப்பார்கள்.

இடைக்கால பட்ஜெட்டிலாவது பகுதிநேர ஆசிரியர்களை  பணிநிரந்தரம் செய்ய கூடுதலாக நிதிஒதுக்கி காப்பாற்ற வேண்டுகிறோம் என்றார். 

முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரை சுற்று பயணங்களில் நேரில் சந்தித்தும் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிறோம்.

இதோடு மட்டும் இல்லாமல் பணிநிரந்தரம் செய்ய கேட்டு கருணை மனுக்களை தபால் மூலமாகவும்  அனுப்பி வருகிறோம். 

அரசின் கவனத்தை ஈர்க்க கருணை மனு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மனு நீதி நாளில் கொடுத்து  வருகிறோம். 

20 அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு 10 கல்விஆண்டுகளாக தொகுப்பூதியத்திலே  பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என குரல் கொடுத்துள்ளார்கள்.

எனவே இந்த வேலை கொடுத்த அதிமுகவும் ஆதரிக்க வேண்டுகிறோம்.

ஆளும் அதிமுகஅரசு இதை தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றி தரவேண்டும் என்றார். 

தொடர்புக்கு :-

சி. செந்தில்குமார் 

மாநில ஒருங்கிணைப்பாளர் 

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 

செல் : 9487257203

34 comments:

  1. Nadakadhudiyo ne thalaigila ninu Thani kudichalum nadakadhadiyo

    ReplyDelete
    Replies
    1. தமிழில் கருத்து கூற பழகவும்.அப்புறம் கருத்து சொல்லலாம்😁😁😁😁😁😁😁

      Delete
    2. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏன் வேலை போடவேண்டும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கும் அதிமேதாவிகளே! இந்த வாய்ப்பு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வில்லை என்றால் அனைத்து பணியிடங்களையும் இந்த ஆட்சி நிரப்பி இருக்குமா? 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் 80000 பேர். எந்த வேலைக்கும் அறிவிப்பு வரும்.அதில் பல குழப்பங்கள் நடக்கும். வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆக மொத்தம் பணி நியமனம் நடப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் வாரத்திற்கு 3 நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என்ற குழப்பமான பணிநியமனத்தைக் கொண்டு வந்து வயதாகியும் வேலை கிடைக்காமல் இருந்துவந்தவர்கள் ஏதோ வாய்ப்பு வருகிறதே என்று இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொச்சைப் படுத்தும் நீங்கள் 40 வயதிற்கும் மேல் வேலை இல்லை என்று பி.எட் படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று ஆசிரியர் வேலைக்காகவே இன்னும் தேர்ச்சி பெற உழைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்ட விசயம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? பல பள்ளிகளில் பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் எவ்வளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (இரவு பகலாக IFHRMS) தெரியுமா இந்த கொரோனா விடுமுறையிலும்? அரசிடம் போராடுங்கள். 7700க்காக பத்தாண்டுகளைத் தொலைத்தவர்கள் ஏழைகள் மட்டுமே. உங்களுக்காக அரசிடம் கேளுங்கள். இப்போதும் சத்துணவு சமையலர் பணிக்கே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதற்கொண்டு விண்ணப்பிக்கும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம். மத்திய மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தி தொகுப்பூதியத்தில் நியமித்து விட்டு கண்ட வரிகளையெல்லாம் போட்டு அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். படித்தவர்கள் 7000 8000 என கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள் (அரசுப்பணி என்ற பெயரில்) இதை உணருங்கள்.

      Delete
    3. 7000 8000 சம்பளத்துக்கு பகுதி நேரமாக நீங்க அந்த தெய்வீக வேலைய காலம் முழுக்க தொடருங்க... உங்க சேவை அரசுக்கு தேவை .

      Delete
  2. Idha ketadhu dhivya oru kadha dha neyabagam varudhu ilavu katha kili ilavu katha kili nu onnu irudhucham idhukumela story yellaruku theriyum kili yaru nu theriyum...

    ReplyDelete
    Replies
    1. எதாச்சும் புரியுதா நீங்க சொல்லுவது😁😁😁😁😁😜

      Delete
    2. Thalainagaram film vadivelu comedy

      Delete
  3. Ne part time teacher ah irupa adhanala unaku theriyadhu puriyadhu.

    ReplyDelete
  4. https://m.youtube.com/watch?v=xGTvNslOy8Y

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.

      Delete
  5. part time permanent Panna kuadadhu exam eludhutum pass pannita tharalama permanent pannuga fail ahanavanga veliya vitu thukunga ...andha posting Vera yaravadhu podunga ippudi tha Panna veandum...

    ReplyDelete
    Replies
    1. Apadiya sari 2010 la posting pota teachers ah permanent panitu exam pass pana time kuduthagaley apadikuda panalamey

      Delete
    2. Ayo Ayo vairu eriyudhu permanent mattum pannidathinga system change pannida veandam

      Delete
    3. Naa kalvi seidhi ku 4 times comments poatuta again solura naa part time join pannum podhu age 31 ippa 41 age atchu..naa work pandra place manjanaicken Patti govt school..naa mattum.illa 90% staff .Naga pandra job maximum office work mattum tha balance time la teach pandrom..
      Knowledge poiduchu pa..indha 10 years la naa mattum illa ennoda frd ellarumay seardhu padichom govt job ku adhula oru 10 Peru select agi pure govt job ku poitanga...enga mathiri alunga Nala govt job vanga mudiyula knowledge poiduchu idhu tha unmai plz ...eadhavdhu karunai quato la govt job vangidalam nu irrukom...adhuku tha niriya Manu kodukarom( self comments) ..innonu solura niriya comments poduringa exam vaika veandum nu mansatchi PADI solurdhu ellamy sari tha pa...but Naga idhiya nambitu irrudhutom ...avalvu tha govt kaila tha irruku varum nu ninacha varutum illa naa eppudiyo onnu pogutum...

      Delete
  6. தயவுசெய்து பகுதி நேர ஆசிரியர்களை தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம்

    ReplyDelete
  7. Ivaga trb tet exam la pass pana nermaya yeluthi pass anaga nu namba nambanum ana yegala interview vachi certificate verify pani select panaga nu sonna namba mataga part time post yelamey kasavagitudha potaganu soiluvaga.16000 per la ipa 12000 dha irukom govt yegaluku yerakam katadha nu theriyala yegaluku adhigapatcha salary la venam koranjapatcha salary kudithu niradhra job kudutha sandhosama irukum

    ReplyDelete
    Replies
    1. Ada lusu andha 16000 Perla 4000 Peru therichukitanga idhu govt job illa nu purichukitaga..adhanala relive agitanga ungaluku poga vakku illa na* kitu irruka veandiyadhu tha..plz sorry again solura plz purichukonga idhiya nambadhinga

      Delete
  8. அப்போ எதுக்கு trb exam வைக்கிறாங்க???

    ReplyDelete
    Replies
    1. Trb exam la perfect ah nadakudha mr Kumar sir evlo case pending tet la OMR sheet mathi problem anadhula maradhutigala ungaliku job problem na govt ah keluga adha vitu irukaravana la veliya anupitu yenaku vela kudu nu nee job kula pona Una thoratharadhuku unaku pinadiye inorutha varuvan.

      Delete
    2. மிகவும் சரி. நீ ஒருவருக்கு குழி தோண்டினால் உனக்கு பின்னால் 4 பேரு மண் வாருவார்கள்..

      Delete
    3. யாரோ ஒரு ஆள் இரு ஆள் பின்வாசல் வழியா போக தான் செய்வான்.. ஆனா என்னுடைய நண்பர்கள் பலர் கடினமாக படித்து பணம் குடுக்காமல் trb மூலமாக வேலை பெற்றுள்ளுனர். நம்பிக்கையுடன் படித்தால் வேலை நிச்சயம். வெறும் பகுதி நேர ஆசிரியர் என அவர்கள் அனைவரையும் எப்படி அரசு பணியில் அமர்த்த முடியும், அப்பொழுது தனியார் பள்ளி கல்லூரி மற்றும் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு இரவு பகல் உழைத்து குடும்பத்தை காப்பாற்றி trb தேர்வுக்காக காத்திருப்போர் நிலை என்ன.. வெறுமனே பகுதி நேர ஆசிரியர் மற்றும் சீனியாரிட்டி என்பது தகுதி அல்ல.

      தேர்வு எழுதி வேலைக்கு சேருவது தான் தகுதி. அதற்கு தான் கூறினேன்... எதற்கு தேர்வு வைக்க வேண்டும் என...

      இவர்கள் தங்களுடைய இணைய தள விளம்பரத்திற்கு பகுதி நேர பணியாளர்களை குளிர்விக்க இப்படி பொய் செய்தியை பரப்புகின்றனர்..

      ஏமாறாதீர்கள்..

      Delete
    4. Kumar Sir u great super advice

      Delete
  9. பகுதிநேர ஆசிரியர் ஆசிரியைகளின் உழைப்பு போற்றுதலுக்குரியது..

    ReplyDelete
    Replies
    1. தேர்தல்ல நில்லுங்க... கல்வி அமைச்சர் பதவி கிடைக்கும்

      Delete
    2. Thagudhi iruku sir andha level ku padichidha irukom

      Delete
    3. hello boss... nangalum padichutu thaguthiyoda than irukom...

      ungaloda ore thaguthi... part time la govt school la work pandringa... but ithu ellam thaguthi ila...

      Delete
    4. Vera yen thadhugthi sir election la Nika venum

      Delete
  10. Have English vacancy?

    ReplyDelete
  11. ஆசிரியர் பயிற்சி (Technical Teacher certificate course) படிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அரசாணை உள்ளதா???

    தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்களுக்கு சேர்த்து தான் பள்ளி கல்வி துறை கீழ் ஒவ்வொரு மாதமும் 7700 ரூபாய் வழங்க பட்டு வருகிறது..

    தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த ஒன்பது ஆண்டுகள் ஆக அரசிடம் பெற்ற ஊதியம் திரும்ப தர வேண்டும் என்று கூறினால் பகுதி நேர ஆசிரியர்கள் நிலை என்ன???

    ReplyDelete
    Replies
    1. Part time teacher ah vida ne pandra comedy semaya irukuda nee pota comment ku neye super potukara kiruku payaley

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி