ஜன. 1 முதல் வாட்ஸ்ஆப் இயங்காத செல்லிடப்பேசிகளின் பட்டியல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2020

ஜன. 1 முதல் வாட்ஸ்ஆப் இயங்காத செல்லிடப்பேசிகளின் பட்டியல்!


கீழே குறிப்பிடும் ஏதேனும் ஒரு ஆன்டிராய்ட் செல்லிடப்பேசிகளை நீங்கள் வைத்திருந்தால், ஒரு வேளை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உங்கள் செல்லிடப்பேசியில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகலாம்.


பழைய ஆப்ரேடிங் சிஸ்டங்கள் (ஓஎஸ்) கொண்ட செல்லிடப்பேசிகளில் இயங்கும் வாய்ப்பை வாட்ஸ்அப் கம்பெனி நீக்கி விட்டதே இதற்குக் காரணம்.


இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் கிடைத்த பதிலில், ஆன்டிராய்ட் 4.0.3 ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட செல்லிடப்பேசிகள் அல்லது புதிய ஐஃபோன்கள் அதாவது ஓஎஸ் 9 மற்றும் புதிய ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் செல்லிடப்பேசிகளில் மட்டுமே வாட்ஸ்அப் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதவாது,  ஆபரேடிங் சிஸ்டம் 4 வரை கொண்ட அனைத்து செல்லிடப்பேசிகளும் நாளை முதல் வாட்ஸ்அப் செயலியை இழக்க நேரிடும், இதில், ஐஃபோன்களான 4எஸ், ஐஃபோன் 5, ஐஃபோன் 5எஸ், ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6எஸ் ஆகியவற்றிலும் வாட்ஸ்அப் இயங்காது என்று தெரிகிறது.


எச்டிசி டிசையர், மோட்டரோலா டிராய்ட் ராஸர், எல்ஜி ஆப்டிமஸ் பிளாக், சாம்சங் காலக்ஸி எஸ்2 ஆகியவையும் 2020 ஆம் ஆண்டுடன் வாட்ஸ்அப் செயலியை இழக்கிறது.


உங்கள் செல்லிடப்பேசி எந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதை, செட்டிங் மெனுவில் சென்று பார்க்கலாம். அதற்கு செட்டிங் மெனுவில், ஜெனரல் மற்றும் இன்ஃபர்மேஷன் ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் சாஃப்ட்வேர் என்பதை கிளிக் செய்தால், அதில் ஆபரேடிங் சிஸ்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி