2,000 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் - kalviseithi

Dec 24, 2020

2,000 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம்

 


பத்து நாட்களில், 2,000 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 900 பள்ளிகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில், 37 மாவட்டங்களிலும், 5,946 சுயநிதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, தொடக்க கல்வி இயக்குனரகம் வழியே தொடர் அங்கீகாரம் வழங்கப்படும். அந்த வகையில், 2,900 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.


முதற்கட்டமாக, இம்மாதம், 11ம் தேதி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 120 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேரடியாக பள்ளி நிர்வாகிகளிடம் அங்கீகார ஆணை வழங்கியுள்ளார். இதுவரை, 10 நாட்களில், 2,000 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 


மீதமுள்ள, 900 பள்ளிகளுக்கும் வரும் நாட்களில், அங்கீகார உத்தரவு வழங்கப்படும். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி