ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - kalviseithi

Dec 19, 2020

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 


பார்வை 6 - ல் காணும் அரசாணையின்படி , அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன அலுவலர்கள் என்பதால் தற்காலிகமாகத்தெரிவு செய்யப்பட்ட தேர்வரின் சுயவிவரங்கள் மின்னஞ்சல் வாயிலாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது . பணிநாடுநர்களின் சொந்த மாவட்டங்களில் பணியிடம் காலியாக இல்லையெனில் பணியிட ஒதுக்கீட்டு ஆணையில் கலம் -4 ல் குறிப்பிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உரிய பணி நியமனம் வழங்க ஏதுவாக தனியரின் சுயவிவரங்கள் அனுப்பி வைக்க சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தப்படுகிறார் . 13. இப்பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்களின் அடிப்படையிலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் , அனைத்து பணி நாடுநர்கள் தொடர்பான சான்றிதழ்களின் நகலினை நன்கு பரிசீலித்து அவர்கள் பணி நியமனத்திற்குரிய தகுதியினை பெற்றுள்ளனரா என்பதனை உறுதிபடுத்திய பின்னரே பணி நியமன ஆணை வழங்குதல் சார்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் , தகுதியற்ற பணி நாடுநர்கள் எவரேனும் தற்காலிக தெரிவு பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அவர்களது தற்காலிக தெரிவினை ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிய அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . அவ்விவரத்தினை உடன் தெரிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் , தனியர்களது கோப்பினை நன்கு பரிசீலனை செய்த பிறகே முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட வேண்டும் . அவ்வாறு பணிநியமனம் வழங்கும்போது அப்பணியிடம் காலியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே தனியருக்கு முதுகலை ஆசிரியர் பணியிடம் நியமனம் செய்து ஆணை வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது . மேலும் தகுதியற்ற நபருக்கு பணிநியமனம் வழங்கப்படின் அதற்கு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது . 14 , பணியிட ஒதுக்கீடு செய்வதற்கான இணையதள கலந்தாய்வில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண்ணின் அடிப்படையில் பணியிட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படும் . 15. பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான EMIS இணைய தள கலந்தாய்வினை மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி எவ்விதமான புகாருக்கும் இடமளிக்காமல் நடத்தப்பட வேண்டும் என்பதோடு , தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ள தேர்வர் எவரேனும் கலந்தாய்வு நடைபெறும் விவரம் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்தால் , அது தொடர்பாக சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

PDF link

Touch Here

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி