அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜன.4-ல் இலவச JEE தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு - kalviseithi

Dec 18, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜன.4-ல் இலவச JEE தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச ஜேஇஇ நுழைவுத் தேர்வுபயிற்சி வகுப்புகள் ஜன.4-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:

ஐஐடிகளில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வெழுத அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

டிச.21 முதல் விண்ணப்பம்

நடப்பாண்டு கரோனா பரவலால் இணையவழியில் ஜேஇஇநுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காக டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் ஜன. 4-ம் தேதிமுதல் தொடங்கவுள்ளன. பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் டிச.21 முதல் 31-ம்தேதி வரை தாங்கள் படித்த பள்ளியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ceochn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பி வைக்க வேண்டும்.

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் பயிற்சி தரப்படும். இதற்காக மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பயிற்சி நேரம் உட்பட பிற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி