சைனிக் பள்ளிகளில் சேர இன்றே கடைசி நாள் - விண்ணப்பிக்க DIRECT LINK... - kalviseithi

Dec 18, 2020

சைனிக் பள்ளிகளில் சேர இன்றே கடைசி நாள் - விண்ணப்பிக்க DIRECT LINK...

 


நாடு முழுவதும் 23 மாநிலங்கள்‌ மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும்.


இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜன.10-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே தேர்வு பிப்.7-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கானடிச.18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


எனவே, இந்தத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள நாளை கடைசித் தேதி ஆகும்.


மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி