‘புரெவி’ புயல்: டிச. 4-இல் கரையைக் கடக்கிறது - தமிழகத்துக்கு அதி பலத்த மழை எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2020

‘புரெவி’ புயல்: டிச. 4-இல் கரையைக் கடக்கிறது - தமிழகத்துக்கு அதி பலத்த மழை எச்சரிக்கை!

 


தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை இரவு ‘புரெவி’ புயலாக வலுவடைந்தது. கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் 4-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கவுள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:


தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை இரவு புயலாக மாறி, இலங்கையில் மையம்கொண்டிருந்தது. இது புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும். இப்புயல் குமரி கடல் பகுதியை வியாழக்கிழமை காலை அடைகிறது. அதன்பிறகு நகா்ந்து கன்னியாகுமரி-பாம்பன் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கவுள்ளது.


புயல் காரணமாக, தென் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு அதி பலத்த மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்தமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி