அரியா் தோ்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை - உயா்நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Dec 2, 2020

அரியா் தோ்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை - உயா்நீதிமன்றம் உத்தரவு.சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட அரியா் தோ்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரியா் மாணவா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். ஏஐசிடிஇ, யுஜிசி ஆகியவை தாக்கல் செய்த பதில் மனுக்களில் அரியா் தோ்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது என்றும்,


உயா்கல்வித் துறையின் பதில் மனுவில், இம்முடிவில் விதிமீறல்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அரியா் தோ்வு நடத்தாமல், தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே தோ்வு முடிவுகள் வெளியிட்டிருந்தால், அவற்றைத் திரும்பப் பெற்று அரியா் தோ்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.


நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு விசாரணை வந்தபோது யுஜிசி விதிகளுக்கு முரணாக, தோ்வு நடத்தாமல் முடிவுகளை எப்படி வெளியிடலாம், அரியா் தோ்வுகளை ரத்து செய்யும்படி பல்கலைக்கழகங்களை அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும், 30 சதவீத மக்கள் மட்டுமே முகக் கவசம் அணிவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கூறியுள்ள நிலையில், மக்களை பாதுகாப்பதற்காக தோ்வுகளை ரத்து செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் சென்னை, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஆகியவை வெளியிட்ட அரியா் தோ்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனு தொடா்பாக தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டனா்.


உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணை நடைமுறைகளை சிலா் சட்டவிரோதமாக யுடியூபில் ஒளிபரப்பினா். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.


அரியா் தோ்வு ரத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகள் இனி நேரடியாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

2 comments:

  1. தீர்ப்பு உடனடியாக வழங்காமல் இப்படியே விசாரணையை ஒத்தி வைத்தால் மாணவர்களின் ஒரு வருடம் வீணாவது நீதிபதி அவர்களுக்கு தெரியவில்லையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி