சாதிவாரி கணக்கெடுப்பு! நீதிபதி குலசேகரன் புதிய முடிவு !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2020

சாதிவாரி கணக்கெடுப்பு! நீதிபதி குலசேகரன் புதிய முடிவு !!


கணக்கெடுப்பு நடத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் , கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்த நீதிபதி குலசேகரன் ஆணையம் முடிவு செய்துள்ளது.


தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த  கடந்த 7-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.குலசேகரன், ஆணையத்தின் தலைவராக கடந்த 21-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். 


இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இவ்வாணையம்  முதல் செயல்பட தொடங்கி உள்ளது. புதிய அலுவலகத்தில் நீதிபதி குலசேகரன் தனது பணியை தொடங்கினார்.  பின்னர்  நீதிபதி குலசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை எந்த அடிப்படையில் செய்தால் அதனை விரைவாகவும், சரியான முறையிலும் முடிக்க முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.



அத்துடன், கடந்த 1970-ம் ஆண்டு நடத்தப்பட்ட  சட்டநாதன் ஆணையம் மற்றும் 1985-ம் ஆண்டு அம்பாசங்கர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், மற்றும் தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 



மேலும், தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அத்துடன் கருத்தரங்கம் நடத்தி சாதிவாரியான புள்ளி விவரங்களை பெறவும் திட்டமிட்டுள்ளோம். தேவைப்படும்பட்சத்தில் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்துள்ளோம் என்றார்.


சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை 6 மாதத்துக்குள் முடித்து ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. கடந்த 2013,2017,2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் B.Ed பதிவு செய்த சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் .
    இது அனைத்து TET தேர்ச்சி பெற்றவர்களும் எப்போதாவது வேலை வாய்ப்பு உறுதி என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்
    TRT EXAM நல்லதல்ல.
    அரசாங்கம் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் யாருக்கும் பாதகம் இல்லாமல்

    ReplyDelete
  2. கடந்த 2013,2017,2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் B.Ed பதிவு செய்த சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் .
    இது அனைத்து TET தேர்ச்சி பெற்றவர்களும் எப்போதாவது வேலை வாய்ப்பு உறுதி என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்
    TRT EXAM நல்லதல்ல.
    அரசாங்கம் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் யாருக்கும் பாதகம் இல்லாமல்

    ReplyDelete
  3. சாதி என்னும் சாக்கடையை இன்னும் எத்தனை வருடங்கள் வளர்க்கப் போகின்றீர்கள்.

    என்னதான் அவரவர் தாய்மொழி மேன்மையானது என்றாலும் என்னவோ சாதிப் பெயரைச் சொல்லும்போதும் எழுதும்போதும் அது தன் மேன்மையை இழந்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இருக்கும் வரையில் சாதி இருக்கும். இட ஒதுக்கீடு எப்போது சாதி அடிப்படையில் இல்லை எனும் நிலை வரும்போது சாதி ஒழியும். அதுவரை சாதி கண்டிப்பாக இருக்கும்.

      Delete
    2. சாதிவாரி கணக்கெடுப்பு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டிற்கு உதவுமோ இல்லையோ என்று தெரியவில்லை ஆனால் சமுதாயத்தில் சாக்கடைகள் என்னும் சாதி கட்சிகள் தோன்றவும் வன்முறைகள் வெடிக்கவும் நிச்சயம் வழிவகுக்கும்.




      Delete
  4. Seniority na naanga lam eppo வேலைக்கு செல்வது ... TRT vaiuunga ..naan 2019 TET passed.. seniority na life pooidum..

    ReplyDelete
  5. 2013 la yaavathu 30000 posting pootanga . But 2017,2019 la poostingeh poodala...yaarukkum veanam TRT vaiyunga...pass pandravanga ellam job poolaam...

    ReplyDelete
  6. Only tet verification seniorty. Vera entha method follow pannalum case poda vaipu iruku

    ReplyDelete
    Replies
    1. nee 2050 la ithe comment panniruppa.... exam la pass pannavanoda peran vandhu unakku reply pannuvan... appaium seniority nu sollittu iru

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி