எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் - புதிய அளவு அறிவிப்பு. - kalviseithi

Dec 9, 2020

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் - புதிய அளவு அறிவிப்பு. சீனா, நோபாளம் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்து புதிய உயரத்தை அறிவித்துள்ளன. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்ட் போற்றப்படுகிறது. கடந்த 1954ம் ஆண்டு இந்த சிகரத்தின்  உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது. சீனா தனது அளவீட்டில், 8,844.43 மீட்டர் இருப்பதாக அறிவித்தது. இதற்கிடையே, நேபாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்தன. இதனைத்தொடா–்ந்து, சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்ய  நோபாளம் முடிவு செய்தது. அதன்படி, சீனாவும், நேபாளமு் இணைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மறு அளவீட்டு பணியை தொடங்கின. இப்பணி தற்போது நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எவரெஸ்ட்டின் புதிய உயரம் நேற்று அறிவிக்கப்பட்டது.  அதில், 86 செமீ அதிகமாக புதிய உயரம் 8,848.86 மீட்டர் என நேபாளம் அறிவித்துள்ளது.

5 comments:

 1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
  PGTRB2021 regular and online class starts on: 14-12-2020.
  நடைபெறும் பாடங்கள்..
  ENGLISH
  MATHEMATICS
  BOTANY
  COMMERCE And
  TNEB accountant.
  Study materials also available.!

  ReplyDelete
  Replies
  1. தா உங்களுக்கு வேற வேலையே இல்லையா எந்த செய்திய திறந்தாலும்

   Delete
  2. ௨ண்மை நண்பா

   Delete
 2. China pru alavu solluthu.....nepalam oru alavu solluthu....

  ReplyDelete
 3. PG TRB CHEMISTRY... CONTACT 9842164082... PLACE.. madurai

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி