அரையாண்டு தேர்வு ரத்து பள்ளி கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2020

அரையாண்டு தேர்வு ரத்து பள்ளி கல்வித்துறை முடிவு



 பள்ளிகளை இன்னும் திறக்க முடியாததால், காலாண்டு தேர்வு மட்டுமின்றி, தற்போது, அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 


கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுதும் மார்ச்சில் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில், ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில், தேர்ச்சி அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.பிளஸ் 1க்கு ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டது. 



பிளஸ் 2வுக்கு மட்டும், அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்ததால், பள்ளிகளை திறந்து வகுப்புகளை நேரடியாக நடத்த, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தனியார் பள்ளிகளில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி, 'டிவி' வழியே வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. 


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை முடித்துள்ளன.இதையடுத்து, இந்த மாதம் நடக்க உள்ள அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வழக்கமாக, வரும், 14ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 


பள்ளிகள் திறக்கப்படாததால், தேர்வுகளை நடத்த வேண்டாம் என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தனியார் பள்ளிகள் மட்டும், விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும், மாதிரி தேர்வாக நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

11 comments:

  1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
    PGTRB2021 regular and online class starts on: 14-12-2020.
    நடைபெறும் பாடங்கள்..
    ENGLISH
    MATHEMATICS
    BOTANY
    COMMERCE And
    TNEB accountant.
    Study materials also available.!

    ReplyDelete
    Replies
    1. Tamil PGTRB BEST Coaching center and study materials இருந்தா Referபண்ணுங்க . Reply please

      Delete
  2. VIP AND KAVIYA COACHING CENTER REFER
    +919600736379

    ReplyDelete
  3. Part time teachers naga irukom exam vaiga sir...

    ReplyDelete
    Replies
    1. Ungaloda manatha neegalay vangikadhinga same neega part time teacher illa...

      Delete
    2. உங்க போன் நம்பர் தாங்க உங்களிடம் பேசணும் நண்பரே

      Delete
  4. Tamilsolai Academy - Karur
    Cell : 75 3005 8005.
    PG TRB - TAMIL, MATHS, COMMERCE...
    ONLINE LIVE CLASSES....
    ADMISSIONS OPEN NOW.

    ReplyDelete
  5. For More Details Visit our website
    www.tamilsolaiacademy.com

    ReplyDelete
  6. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றால் 40 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் பணி வாய்ப்பு நிச்சயம்.இந்த நடைமுறையைத் தேர்தல் அறிக்கையில் கூறும் அரசே தேர்தலில் வெற்றி பெறும்.

    ReplyDelete
    Replies
    1. கனவு காணுங்கள்.....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி