கூகுள், ஆப்பிள் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலை கிடைக்க திறமை இருந்தால் போதும், பட்டப்படிப்பு அவசியமில்லை - லிங்க்டுஇன் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2020

கூகுள், ஆப்பிள் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலை கிடைக்க திறமை இருந்தால் போதும், பட்டப்படிப்பு அவசியமில்லை - லிங்க்டுஇன் ஆய்வு


ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் இது தொழில்துறையின் விதிமுறையாகவே விரைவில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட 50 சதவீதம் பேர், 4 ஆண்டு கல்லூரி பட்டப்படிப்பு தகுதி இல்லாதவர்களே என்று அதன் சிஇஒ டிம்குக் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். வேலை செய்வதற்கு தேவையான திறனை பெரும்பாலான கல்லூரிகள் கற்றுத் தருவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.


எலக்ட்ரானிக் டெக்னீசியன், மெக்கானிக்கல் டிசைனர், மார்கெட்டிங் பிரதிநிதிகள் போன்ற வேலைகளில் பட்டதாரி அல்லாதவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது லிங்க்டுஇன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி