நீதி மன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து - உரிய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - kalviseithi

Dec 29, 2020

நீதி மன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து - உரிய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டால் பின்வருமாறு செயல்பட வேண்டும் . 

1. நீதிமன்றத்திலிருந்து வழக்கு சார்ந்த அறிவிப்பு வரப்பெற்றவுடன் அரசு வழக்கறிஞர்களை அணுகி இவ்வழக்கை நடத்துவதற்கு கடிதம் சமர்ப்பித்தல் வேண்டும் . 

2. நீதிமன்றத்தில் இருந்து வரப்பெற்ற அறிவிப்பு ( Notice ) வாதியின் உரை ( Affidavit ) நீதிமன்ற தடையாணை ( Stay order ) முதலானவற்றின் நகல்கள் தேவையான அளவிற்கு எடுக்கவேண்டும் . வழக்கு தொடுக்கப்பட்ட நிகழ்ச்சி பற்றிய வழக்கின் சுருக்கம் ( History of the Case ) தயாரித்து சமர்ப்பித்தல் வேண்டும் . 

3. ஒரு வழக்கில் பல அலுவலர்கள் சேர்க்கப்பட்டிருப்பின் அதில் எந்த அலுவலரின் ஆணை / செயல்முறைப்பற்றி வழக்காடப்படுகிறதோ , அவர் இப்பணியை செய்ய வேண்டும் . நீதிமன்றத்திலிருந்து தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் இதனைச் செய்யவேண்டும் . 

4. ஒரு வழக்கில் அரசு செயலாளர் , இயக்குநர் , இணைஇயக்குநர்கள் , பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருப்பினும் , வழக்கு தொடர்ந்த நபர் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்களோ அம்மாவட்ட அலுவலர்கள் வழக்கு சார்ந்த விவரங்களை நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .

 5. வழக்கு சார்ந்து அரசு வழக்குறைஞருடன் கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி நேரில் சென்று அவ்வப்போது வழக்குகள் தொடர்பாக நினைவூட்டல் / விவரங்கள் அளித்தல் வேண்டும் .

Pdf link

Touch Here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி