கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2020

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

 


கல்லூரி உதவிப் பேராசிரியர்  பணியிடங்களுக்கான நெட் தேர்வு  முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர்  பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது.


கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.

இந்த ஆண்டு நெட் தேர்வுக்கு 8,60,976 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,26,707 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 1,56,882 தேர்வர்கள் பொதுப் பிரிவினர் ஆவர். பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான பிரிவில் 47,161 பேர் தேர்வெழுதினர். க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி பிரிவில் 1,92,434 பேரும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 88,914 பேரும் பழங்குடியினர் பிரிவில் 33,811 பேரும் கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.

கரோனா காரணமாக 12 நாட்களுக்குத் தேர்வு நடைபெற்றது. ஆங்கிலம், இந்தி உட்பட 81 பாடங்களுக்கு, தினந்தோறும் 2 ஷிஃப்டுகளில் கணினி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள்  இன்று வெளியாகியுள்ளன. தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள: https://ntaresults.nic.in/resultservices/UGCNet-auth-June-2020

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி