சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2020

சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம்?

 


பள்ளிகள் திறப்பு தள்ளி போயுள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு பின், பொது தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 


தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்பட வில்லை. புதிய கல்வி ஆண்டு துவங்கிய நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக, பாடம் நடத்தப்படுகிறது.


இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.- இதை தொடர்ந்து, பள்ளிகளும் விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பண்டிகை காலம் என்பதால், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.


இதன் காரணமாக, பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட முடியாமல், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த மார்ச்சில், பொதுத்தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தமிழக சட்டசபைக்கு, வரும் ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், அந்த நேரத்திலும், பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளது. 


எனவே, தேர்தல் முடிந்ததும், ஜூன் மாதம் தேர்வை நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை, உயர் கல்வித் துறை, மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதற்கு, முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், அறிவிப்பு வெளியிட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துஉள்ளது.

23 comments:

  1. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது

    ReplyDelete
  2. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் உங்களிடம் கூறினாரா??

      Delete
  3. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை

      Delete
  4. Theriyama tet la pass pannitanga ivanuga thollai Thanga mudiyula da Sammy

    ReplyDelete
  5. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
  6. Oru velai 2021 la dmk aatchi kku vanthal all compititive exam cancel ( tnpsc ,trb Board Exams) pannittu all posting m seniority moolamaagavae vacancy ah nirappiduvanga nnu soldrangalaeee .....????? Unmaiya frds..??!!!! Oru exam kooda varathamaaaeeeee..????

    ReplyDelete
    Replies
    1. Kasu vankittu podurathukku intha exam ye better

      Delete
    2. தேர்வு வைப்பதே வசூலுக்குதான்

      Delete
    3. தேர்வு வைப்பதே வசூலுக்குதான்

      Delete
  7. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
    Replies
    1. Ella postlayum ithey comment podrnga.Thayavu seithu enna helpnu solunga.mudincha seirom.ipdi ella postlayum comment panrenga.unkaluku enna help venumnu comment panunga pls

      Delete
    2. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
      அவரே காமெடி பண்றார்! நீங்க வேற!!!!!

      Delete
  8. 2013 cv tet ஆசிரியர்கள்& பகுதிநேர ஆசிரியர்கள் பணிநியமனம் செய்

    ReplyDelete
  9. 2013 cv tet ஆசிரியர்கள்& பகுதிநேர ஆசிரியர்கள் பணிநியமனம் செய்

    ReplyDelete
  10. Admin sir pls.any news published with date and time

    ReplyDelete
  11. Pg chemistry 2019.
    வழக்கு தொடுத்த 10 நபர்களை தவிர மீதமுள்ள அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு -court

    ReplyDelete
  12. Sir unga phone no give me sir pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி