கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுங்கள் : யூஜிசி உத்தரவு. - kalviseithi

Dec 18, 2020

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுங்கள் : யூஜிசி உத்தரவு.


 கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு பிறகு விலகிய மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கல்வி கட்டணத்தை திருப்பி தர யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து யுஜிசி பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தாக்கத்தால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. ஊரடங்கால் பெற்றோர்களும் வருமானம் இன்றி உள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்கள், நீதிமன்ற உத்தரவுகள்,  மக்கள் நல அமைப்புகளிடம் இருந்து பல்வேறு கடிதங்கள் என  யுஜிசிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படியில் இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.


2020-21 கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்த பின் பல்வேறு காரணங்களால் விலகியிருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழுத்தொகையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் திருப்பித்தர வேண்டும். குறிப்பாக தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும்  நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் செலுத்திய  தொகையை திருப்பிதர வில்லை என புகார் கிடைத்துள்ளன.எனவே இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி மற்றும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி