அரையாண்டுத் தேர்வை தனியார் பள்ளிகள் நடத்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2020

அரையாண்டுத் தேர்வை தனியார் பள்ளிகள் நடத்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு.

 


இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் மட்டும், விருப்பப்பட்டால் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதைத்தொடர்ந்து,தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளன. இந்த தேர்வை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்கள் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு நடத்தி, அதில் வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது. தேர்வுக்காக தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி