வயது வந்தோர் கல்வித் திட்டம்: கற்பித்தல் வகுப்புகள் தொடக்கம் - kalviseithi

Dec 2, 2020

வயது வந்தோர் கல்வித் திட்டம்: கற்பித்தல் வகுப்புகள் தொடக்கம்

 


வயது வந்தோர் புதிய கல்வித் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் 12,188 பேருக்குக் கற்பித்தல் வகுப்பு தொடங்கியது.

பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' என்னும் இயக்கம், பள்ளிக் கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தை எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மேம்படுத்தும் வகையில், 15 வயதுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு போதிக்கப்பட உள்ளது.


இதன்படி கோவை மாவட்டத்தில் 688 கற்போம், எழுதுவோம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மையத்திற்கு ஒரு தன்னார்வலர் வீதம், 688 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் எழுதப் படிக்கத் தெரியாத 12,188 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்குக் கற்பித்தல் வகுப்புகள்  தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களையும், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்துக் கல்வித்துறையினர் கூறும்போது, ''இத்திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு மதியம், மாலை நேரங்களில் வகுப்புகள் நடைபெறும். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அனைத்துக் கற்றல் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதற்கட்டமாக ஒரு மையத்திற்கு 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 மணி நேரம் வகுப்பு நடக்கும். அதில் எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்கப்படும். சந்தேகங்கள் எழுந்தாலும் பயிற்றுநர்கள் விளக்கம் அளிப்பர். வாக்களிப்பது நம் கடமை. தூய்மை பாரதம், முதலுதவி, பெண் கல்வி, பணமில்லாப் பரிமாற்றம், பசுமைத் தோட்டம் உட்பட 28 தலைப்புகளில் பாடங்கள் உள்ளன'' என்றனர்.

4 comments:

  1. வயசுக்கு வந்துட்டாளா

    ReplyDelete
  2. I am teacher entha thannarvalarraga sera enna seyya vendum

    ReplyDelete
  3. இந்த வருஷம் அட்மிஷன் கம்மியாதான் இருக்கும் செங்கோட்டையன்Sir பள்ளிகள் திறப்பத பத்தி எதுவும் முடிவு எடுக்காம போனா அடுத்த வருஷம் அட்மிஷன் அதிகமா இருக்கும் Maximum தளர்வுகள் கொடுத்தாச்சு 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்தால் என்ன? அரசு ஆசிரியர்கள் சும்மா சம்பளம் வாங்ணுண்னு நினைக்கிறாங்க தனியார் பள்ளியிலே தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிற பெற்றோர் பள்ளி திறக்லேனா Fees (கட்டாமே) மீதின்னு நினைக்கிறாங்க March வரைக்கும் இழுபறி செய்துAll passன்னு announce பண்ணா வோட்டு கிடைக்கும்னு!!! ஆக மாணவர்களோடா எதிர்காலம்??????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி