பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2020

பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு.

பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு

Click here to download pdf



மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 1354 விடுதிகள் ( 1099 பள்ளி விடுதிகள் - 255 கல்லூரி விடுதிகள் ) தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் விடுதிகளை சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் வைத்திருக்கும் பொருட்டும் , மாணவ , மாணவிகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் 100 மாணவ , மாணவியர்களுக்கு மேல் தங்கிப் பயிலும் 66 விடுதிகளுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் முழுநேர துப்புரவாளர்களை நியமனம் செய்தும் , 100 மாணவியர்களுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் ரூ .2000 / - தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்தும் ஆணையிடப்பட்டது என்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ .2000 / -த்திலிருந்து ரூ .3000 / உயர்த்தப்பட்டது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் தெரிவித்துள்ளார் . மாணவ 2 3. மேலும் , பகுதிநேர துப்புரவு பணியாளர் பணியிடங்கள் வேலை வாய்ப்பகம் மூலமே நிரப்பப்படுகின்றன என்றும் மாதம் ரூ . 3000 / - என மிகக் குறைந்த தொகுப்பூதியம் பெற்று வருவதால் , பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் மிகுந்த சிரமமான சூழ்நிலையில் உள்ளதாகவும் , மேற்காணும் பணியாளர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டாலும் பணி நிறைவு செய்து வீடு திரும்புவதற்கு ஒருநாள் ஆகிவிடுவதால் இவர்கள் வேறு பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது என்றும் இப்பணி பகுதிநேரப்பணி என்பதால் , அவர்கள் இப்பணியை துறந்துவிட்டு கூடுதலாக வருமானம் உள்ள தொழிலுக்கு சென்றுவிடும் நிலை உள்ளது என்றும் தெரிவித்து , இத்துறை விடுதிகளில் பணிபுரியும் 517 பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும் மேற்கண்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார் . அரசு 4. பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் பரிந்துரையை நன்கு கவனமுடன் ஆராய்ந்து , மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சரின் அறிவிப்பினை செயற்படுத்த ஏதுவாக அதனை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களின் சுகாதாரத்தை கருத்திற் கொண்டும் , விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தினை கருதியும் துப்புரவாளர் பணியிடம் இன்றியமையாதது என கருதப்படுவதால் , 01.03.2020 அன்றுள்ளபடி , பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இணைப்பில் கண்டுள்ள 517 பகுதிநேர துப்புரவு பணியாளர்களை , இவ்வரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து , ரூ.4,100- ரூ .12,500 என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ( Special Time Scale of pay ) முழுநேர துப்புரவு பணியாளர்களாக பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது .

9 comments:

  1. Don't worry andha velayum seiya part time teachers naga ready

    ReplyDelete
  2. Sir minister ah poi part time teachers parthadhuku ungaluku sambalam tharadhey thandam mutta mudichiya katitu kelambuga nu soilitaram adhu unmaya

    ReplyDelete
  3. சார்! காவல்துறையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின், மூலமாக பதிவுமூப்பு, அடிப்படையில், தூய்மைப்பணியாளர்களாக!? கடந்த எட்டு ஆண்டுகளாக, சிறப்பு காலமுறை ஊதியத்தில் 3000 1300 300 தரஊதியம், பெற்றுக்கொண்டு, கஷ்டப்படுகின்றோம்!!, ஆனால், காவல் துறை தன் கட்டுப்பாட்டில், வைத்துள்ள, மாண்புமிகு தமிழக முதல்வர், ஐயா, அவர்கள், எங்கள், கோரிக்கை காலமுறை ஊதியம், வழங்க வேண்டுமாய், வேண்டுகிறோம், நன்றி!,

    ReplyDelete
  4. சிறப்பு கால முறை ஊதியம் சிறப்பாக இல்லை மொத்தம்5300 சம்பளம் வாங்கும் நாங்கள் தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாது

    ReplyDelete
    Replies
    1. கடலூர் மாவட்டம் உதய குமார் சம்பளம் போதுமானதாக இல்லை அரசு சம்பளம் என்பதற்கு அர்த்தமாக இல்லை தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத நிலை

      Delete
  5. கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் மாத ஊதியம் தொகுப்பூதியம் 4400₹ இதைவிட பிச்சை எடுக்க சொல்லலாம் தமிழக அரசு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி