கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Dec 12, 2020

கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

 


கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களையே அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11 இளநிலை பொறியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக 1.1.2013-ல் அறிவிப்பு வெளியானது. நான் சிவில் பொறியியல் படித்திருப்பதால் இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் வென்ற நிலையில் அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைப்புவரவில்லை.

அது குறித்து விசாரித்த போது இளநிலை பொறியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. இதை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:

அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். டிப்ளமோ படிப்பு தகுதியாக உள்ள வேலைக்கு பட்டதாரி பட்டம் பெற்றவர் தகுதியானவர் அல்ல. நம் நாட்டில் ஒவ்வொரு பணிக்கும் குறைந்த பட்ச, அதிக கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டாய இலவச கல்வி போன்ற நடைமுறைகளால் நாட்டில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமத்தில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது.

லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்பின்றி தவிக்கின்றனர்.

குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் பலர் பொது வேலைவாய்ப்பை பெறுகின்றனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவர், அதிக கல்வித் தகுதியை பெற்றவருடன் போட்டியிட முடியாது. இருவரையும் சமமாக பார்க்க முடியாது. அப்படி இருவரையும் ஒரே நிலையில் பார்ப்பது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது.

கீழ்நிலை பணிகளுக்கு உயர்க் கல்வி பெற்றோர் தகுதியானவர்கள் அல்ல. கீழ்நிலை பணிகளில் உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் சேர்கின்றனர். இதனால், குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றோருக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கீழ் நிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மைப் பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாளமுடியவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வரி செலுத்தும் அளவுக்கு சம்பளம் பெறுகின்றனர்.

சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கல்வித்தகுதியை பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. அதிக கல்வித்தகுதி கொண்ட அவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. பலர் உயர் கல்வித் தகுதியை மறைத்து பணியில் சேர்வதால் வேலைவாய்ப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை.

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு முதுகலை பட்டதாரிகள், எம்பிபிஎஸ் படித்தவர்களும் விண்ணப்பித்தனர். உயர்க்கல்வித் தகுதி பெற்ற ஒருவரால் கீழ் நிலை பணியை முறையாக செய்ய முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது தான் சமூக நீதியின் நோக்கம். சமவாய்ப்பு இல்லாத போது எப்படி சமூக நீதி கிடைக்கும்.

எனவே, கீழ் நிலை பணிகளில் கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமை செயலர், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும்.

மனுதாரர் இளநிலை பொறியாளர் பணிக்குரிய கல்வித்தகுதியை மனுதாரர் பெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

20 comments:

 1. Part time teachers naga apadidha sir irukom pls help panuga PhD mudichavagala irukga

  ReplyDelete
 2. வரவேற்கக் கூடிய தீர்ப்பு அரசு இதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும்

  ReplyDelete
 3. மத்தவங்க பிச்சை எடுக்கட்டும் 😡

  ReplyDelete
 4. மத்தவங்க பிச்சை எடுக்கட்டும் 😡

  ReplyDelete
 5. IAS ku ug degree qualification thane...appo pg degree mudichiruntha over qualified ah... 😃😃

  ReplyDelete
  Replies
  1. minimum qualification for IAS is just degree, but the level of examination is not just degree level. its more than phd level. highly intellctual exam and interview season. ias is not at even equal to net or gate level.

   Delete
 6. ஐயா நீதிபதி அவர்களே! 1980க்கு முன்பு எல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தாலே வேலை என்று இருந்தது ஆனால் தற்போது 96 இலட்சம் பேர் பதிவு செய்திருக்கின்றனர் அவர்கள் அனைவரும் அரசுத்துறை பணிக்கு வர வேண்டாமா?நீங நீங் மட்டும் இருந்தால் போதுமா?

  ReplyDelete
 7. நான் Group IV எழுத போறேன். 10 ஆம் வகுப்போட நின்றிருக்க வேண்டுமா???😓😓😓😓😓😓😓😓😓😓😓

  ReplyDelete
 8. நீதிபதி அய்யா நீங்கள் சொல்வது சரி அல்ல. எங்களுக்கு தேவை வேலை.. அப்போ எல்லாருக்கும் வேலை வாய்ப்புக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டிஅடிப்படையில்.. கொடுக்க சொல்லுங்க...

  ReplyDelete
  Replies
  1. adei .. govt's job is not only to give govt job for all. thousands of other oppertunities out there...

   Delete
 9. இந்த தீர்ப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது...

  Diploma படித்தவர் தேவை எனும் போது.. Diploma படிக்காத B.E apply செய்யக்கூடாது..

  Diploma படித்துவிட்டு B.E.. M.E.. P.hD என வரிசையாகப் படித்துக்கொண்டே போனாலும்.. அவர் தகுதியானவரே..

  For example.. 12ம் வகுப்பு படித்தவர் வேண்டும் என்ற அறிவிப்புக்கு.. 10+diploma+B.E+M.E என்ற ரீதியில் படித்தால் தகுதியானவர் அல்ல..

  நீங்கள் 12வது படிக்கவில்லை.. அவ்வளவே..

  ReplyDelete
  Replies
  1. மிக தெளிவான பதிவு அந்த தீர்ப்பின் சாராம்சம் அதுவே.

   Delete
  2. Sss true bro but itha vachu niraya per tomorrow content pannuvanga

   Delete
  3. What is Over Qualification?

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி