தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2020

தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 


நிபந்தனைகள் : 1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி , சாதிச்சான்று , முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் . 2. இனசுழற்சி , வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் . 3. விண்ணப்பப்படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் . முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் . 4. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் . 5. காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் . 6. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு , 7. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் | தலைவரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சிப் பிரிவு ) -க்கு அலுவலக வேலை நாட்களில் காலை | 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) , மூன்றாவது தளம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 08/01/2021 ( வெள்ளிக்கிழமை ) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் . தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து தேர்வு நுழைவுச்சீட்டு ( Hall Ticket ) அனுப்பி வைக்கப்படும் . பணிப்பார்வையாளர் | இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் , தேசிய தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கான ( National Career Serivce Portal ) www.ncs.gov.in என்ற இணையதளத்திலும் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது .

PDF link 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி