முதன்மை கல்வி அலுவலகத்தில் ரெய்டு. - kalviseithi

Dec 31, 2020

முதன்மை கல்வி அலுவலகத்தில் ரெய்டு.

சி.இ.ஓ., அலுவலகத்தில் 'ரெய்டு': கணக்கில் வராத ஒரு லட்சம் பறிமுதல்.


கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (சி.இ.ஓ.,) இருப்பவர் உஷா.


இவர், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.


 இதையடுத்து, நேற்றிரவு, 8:00 மணியளவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உட்பட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சி.இ.ஓ., உஷா மற்றும் அலுவலர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் இன்று வழக்குப்பதிவு உள்ளனர்.

6 comments:

 1. ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதையாக ,,,,,,,,,,,,,,,கல்வி துறையிலும் லஞ்சமா ...............அட ஆண்டவா .........

  ReplyDelete
 2. கல்வி வியாபாரமானதா? ஊழல் ஊட்டமா? அரசு இந்த தேர்ந்தல் நேரத்தில் சரியாக கையாளவேண்டியது அவசியம்.... கல்வி...வேள்வி

  ReplyDelete
 3. physics trb material available.
  low cost. contact kumareist@gmail.com

  ReplyDelete
 4. கல்வித்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் உள்ளது

  ReplyDelete
 5. கோவை CEO உஷா 2009 ஆம் ஆண்டு TNPSC நடத்திய DEO தேர்வில் ஆங்கில பாடத்தில் இரண்டாம் இடமே பெற்றார். ஆனாலும் DEO வாக நியமனம் பெற்றார். இவர் நியமனம் குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.

  ReplyDelete
 6. கோவை CEO உஷா 2009 ஆம் ஆண்டு TNPSC நடத்திய DEO தேர்வில் இரண்டாம் இடமே பெற்றார். ஆனாலும் DEO வாக நியமனம் பெற்றார். இவர் நியமனம் குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி