திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. - kalviseithi

Dec 31, 2020

திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் எட்டு மண்டலங்க ளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என துணைவேத் தர் கே.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார் . தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக சென்னை மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக்கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . இந்தநிகழ்ச்சிக்குதுணைவேந்தர் கே.பார்த்தசாரதி தலைமை வகித்து சென்னை மண்டல மையத்தின் கையேட்டை வெளி யிட்டுப் பேசியது : தமிழகத்தில் தற்போது 91 அரசு கலை அறி வியல் கல்லூரிகள் கற்றல் வள மையங்கள் மற்றும் தேர்வு மையங்களாக செயல்பட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன . அரசு கலை , அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் இப்போது அதே கல்லூரி மூலமாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்க முகத்தில் சேரலாம் . அவர்களுக்கான வகுப்புகள் அதே கல்லூ ரியில் நடத்தப்படும் . கற்றல் மையங்களில் தற்போது வரை சுமார் 8,000 - க்கு மேற் பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் . இந்த ஆண்டு 10 , 000 மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம் . திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங் களை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது . எனவே , டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை முடிந்த பின் னர் , அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் . கடந்தாண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத் தப்பட்டது . இதனால் 1,000 - க்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர் . கரோனா தொற்று தற்பொழுது குறைந்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்களைப் பெற்று ஜனவரி மாதம் எட்டு மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் . இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவர் . திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இணையவழி யில் தேர்வு நடத்தப்படுகிறது . தற்பொழுதும் மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வு நடைபெற்று வருகின்றன . அரசு வழி காட்டுதலின் அடிப்படையில் அடுத்த ஆண்டு தேர்வு எவ் வாறு நடத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என் றார் . இந்த நிகழ்ச்சியில் கல்லூரிக் கல்வி இயக்கக சென்னை மண்டல இயக்குநர் ஆர்.இராவணன் , திறந்தநிலைப் பல்க லைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர் என்.தனலட்சுமி , சமுதா யக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் இரா.பிரகதீஸ்வரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி