அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் ? - kalviseithi

Dec 19, 2020

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் ?

 

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஆண்டு மீண்டும் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப் படியை, 17 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது. அதற்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது. 


நிதி நெருக்கடிகளை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை வரை, அந்த அகவிலைப்படி, 21 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படாது என, தெரிவிக்கப்பட்டது.எனவே, பழையபடி, 17 சதவீத அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும், பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.


இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல், அகவிலைப்படியை, 17 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக உயர்த்தி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் நிம்மதி அடைந்துஉள்ளனர்.

3 comments:

 1. அரசுப் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என்ற
  அறிவிப்பை
  தமிழக அரசு வெளியிட்டதும்,
  அடுத்த வருஷம் ஜெயிக்க
  போவது அதிமுக கூட்டணி அரசு தான் என்பது
  உறுதியாகி விடும்,
  ....ஹி ஹி ஹி...

  ReplyDelete
 2. தற்போது இது தேவையற்ற கருத்து

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி