தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், பிஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியுடன் முழுநேர மற்றும் பகுதிநேர பிஹெச்டி பட்டப் படிப்பு நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 2021 பருவ சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளியல், மேலாண்மையியல், கல்வியியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், புவியியல், ஆடை வடிவமைப்பு , கணினி அறிவியல், தமிழ், குற்றவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவா்கள் பிஹெச்டி ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளலாம்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதி பெற்ற மாணவா்களும் நிதியுதவியுடன் ஆய்வு மேற்கொள்ளலாம். தகுதியுள்ள முழுநேர ஆய்வு மாணவா்களுக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிதி உதவி வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருப்பமுள்ள மாணவா்கள் ஜனவரி 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
I need a website address to register my name for pH. D
ReplyDelete