புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Dec 7, 2020

புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 


குடியிருப்பு பகுதிகளில் புதிதாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011ல், ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் 1 கி.மீ. தொலைவிற்குள் தொடக்கப்பள்ளி வசதியும், 3 கி.மீ. தொலைவிற்குள் நடுநிலைப் பள்ளி வசதியும் இருத்தல் வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் விவரம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கட்டமைப்பில் கூறியுள்ளவாறு புவியியல் தகவல் முறை மற்றும் கள ஆய்வு மூலம் கடந்த 2018-19ம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. 


இந்த குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் 2021-2022ல் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்த விவரங்கள் மற்றும் பள்ளி வரைபட பயிற்சி மூலம் பெறப்பட உள்ளது. அதன்படி குடியிருப்பிற்கு அருகில் 5 கி.மீ தொலைவில் உயர்நிலைப்பள்ளி இல்லையென்றால், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், 8 கி.மீ தொலைவில் மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில், உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தலாம். 8ம் வகுப்பில் 70 மாணவர்களுக்குக் குறையாமல் சேர வாய்ப்பு உள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாகவும், 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 100 மாணவர்கள் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தலாம். 


எஸ்சி மக்கள் அதிகமாக உள்ள இடங்கள், பெண்கள் பள்ளிகளை தரம் உயர்த்தலாம். போக்குவரத்து வசதி இல்லாத மற்றும் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் பயில உண்டு உறைவிட பள்ளிகள், விடுதிகள் வழங்கவும் கூறப்பட்டுள்ளது.இவ்விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வட்டார வள மையங்கள் சார்ந்த பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


பொதுமக்களின் பங்களிப்பு

நடுநிலைப்பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் பங்குத் தொகை ₹1 லட்சமும், உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ2 லட்சமும் அரசு கணக்கில் செல்லுத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு 8 கிரவுண்டு, மாவட்ட தலைமையகம் 8 கிரவுண்டு, நகராட்சிக்கு 10 கிரவுண்டு, பேரூராட்சியில் ஒரு ஏக்கர், ஊராட்சியில் 3 ஏக்கர் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4 comments:

 1. வீரவநல்லூரில் பாரதியார் அரசு பள்ளிஊரின் மைய பகுதியில் இயங்கி வந்தது ஆனால் தற்சமயம் ஊரின் வெளிபுற பகுதியில் இயங்கிவருகிறது மாணவ மாணவியர்கள் புதிய பள்ளி செல்லும் வழி மெயின் ரோடு ஆதாலால் சிரம படுகிறார்கள்.ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதால் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .பழைய பள்ளியும் பயன் படுத்தாமல் கட்டிடங்கள் பாதிப்பு உள்ளாகிறது.பெண்களுக்கு தனி கல்வி கூடம் ஊாரின் பழைய கட்டிடத்தில் இனி தொடர்ந்தால் நன்றாக இருக்கும் ...

  ReplyDelete
 2. வீரவநல்லூரில் பாரதியார் அரசு பள்ளிஊரின் மைய பகுதியில் இயங்கி வந்தது ஆனால் தற்சமயம் ஊரின் வெளிபுற பகுதியில் இயங்கிவருகிறது மாணவ மாணவியர்கள் புதிய பள்ளி செல்லும் வழி மெயின் ரோடு ஆதாலால் சிரம படுகிறார்கள்.ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதால் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .பழைய பள்ளியும் பயன் படுத்தாமல் கட்டிடங்கள் பாதிப்பு உள்ளாகிறது.பெண்களுக்கு தனி கல்வி கூடம் ஊாரின் பழைய கட்டிடத்தில் இனி தொடர்ந்தால் நன்றாக இருக்கும் ...

  ReplyDelete

 3. வீரவநல்லூரில் பாரதியார் அரசு மேல்நிலை பள்ளிஊரின் மைய பகுதியில் இயங்கி வந்தது. ஆனால் தற்சமயம் ஊரின் வெளிபுற பகுதியில் இயங்கிவருகிறது இதனால் மாணவ மாணவியர்கள் புதிய பள்ளி செல்லும் வழி மெயின் ரோடு ஆதாலால்
  மாணவ மாணவிகள் சிரம படுகிறார்கள்.ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதால் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .பழைய பள்ளியும் பயன் படுத்தாமல் கட்டிடங்கள் பாதிப்பு உள்ளாகிறது.பெண்களுக்கு தனி கல்வி கூடம் ஊாரின் பழைய கட்டிடத்தில் இனி தொடர்ந்தால் நன்றாக இருக்கும் .
  இதன்படி பெண்களுக்கு மேலும் அதிம பாதுகப்பும் தமிழக அரசின் மீது மக்களுக்கு நன் மதிப்பும் கிடைக்கும் என்பதை வீரை மக்களில் ஒருவனாக தெரிவித்து கொள்கிறேன்...
  நன்றி காசிம்

  ReplyDelete
 4. நூறு ஆண்டுகளுக்கு மேல் கடந்து செயல் பட்டு வந்த நம் பாரதியார் அரசு மேல் நிலை பள்ளி கட்டிடம் இன்று வீரவநல்லூர் மக்கள் மனது வேதனை தருகிற அளவிற்கு பாலடைய பட்டு விட்டது நம் தமிழ் நாடு கல்வி துறை மனது வைத்து மேல் படி பள்ளிகட்டிடத்தை சீரமைத்து வீரவநல்லூர் பாரதியார் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியாக செயல் பட வைத்தால் பள்ளியில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு பெற்றோர்கள் அனுகுவதற்க்கும் நல்ல பயன் பாடாக இருக்கும் நம் தமிழ் நாடு கல்வி துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். by A.S.Murugan.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி