நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை. - kalviseithi

Dec 7, 2020

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை.

 


நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு சென்ற ஆண்டு தமிழக அரசு அரசாணை எண் 101ன் படி தொடக்கக் கல்வித் துறையை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைத்து ஆணை வெளியிட்டது அதனடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, மற்றும் உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டில் வந்தன ஆனால் ஆசிரியர்களுக்கு நன்மை தரக்கூடிய பதவி உயர்வு தரக் கூடிய நிகழ்வுகள் மாற்றப்படவில்லை.

அண்மையில் *வட்டார கல்வி அலுவலர்கள்* நாங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் பெறுகிறோம் ஆகவே *மாவட்டக் கல்வி அலுவலர்* பதவி உயர்வு என்பது வழங்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தின் மூலம் அதற்கான உத்தரவை பெற்றுள்ளார்கள். அதேபோல் *நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களும்* உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் பெற்று வருகின்றனர். ஆனால் எந்தவித பதவி உயர்வும் சுமார் 15 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை ஆகவே *நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும்* உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஒன்றுகூடி ஆலோசனை செய்து அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளனர் விரைவில் நல்லது நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக *கல்வித்துறை செயலாளர்* *இயக்குனர்கள்* விரைவில் முடிவு எடுத்து 1.1.2021 முதல் *நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும்* *உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு* *மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கும்படி ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலில் வெளியிடுவதற்கு உரிய அரசாணைகள் பிறப்பிப்பார்கள் என்று நம்புகிறோம்.

18 comments:

 1. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை 2013 TET தேர்வர்களுக்கு சாதகமாக வராத நிலையில் இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிகிறது பேச்சுவார்த்தையின்போது இதுவரை போராட்டத்தில் பங்கேற்று 2013 நலச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் அட்டை பெற்ற சுமார் 820நபர்களுக்கு மட்டும் பணிவேண்டி வலியுறுத்தி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது

  ReplyDelete
  Replies
  1. அவனுங்க மட்டும் என்ன பெரிய பருப்பா..... போங்கடா.....

   Delete
 2. உறுப்பிளர் அட்டையை வாங்கி பார்த்து அவங்களை மட்டும் கேஸ் போட்டுட போறோங்கோ?????😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  ReplyDelete
 3. PG TRB pending chemistry posting very soon

  ReplyDelete
 4. Second list varuma sir please tell

  ReplyDelete
 5. Within this month or before pongal

  ReplyDelete
 6. "சில காலம் கழித்து பள்ளிக்கல்வி யின் தரம் அதோ கதி ஆக போகிறது,
  ஏற்கனவே, ஒரு secondary grade, teacher ELE HM, MIDDLE SCHOOL HM, THEN BEO தற்போது,
  High school HM...இவர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றதும்,
  பெரும்பாலும் கற்பித்தல் பணி,
  செய்யும் நிலை இல்லாமலே,
  போய்விடுகிறது,
  ....

  பேசாமல் தகுதி பெற்ற அங்கன்வாடி
  ஆசிரியர்களுக்கு,
  50% நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
  கொடுத்தால் என்ன???

  ReplyDelete
  Replies
  1. Do you know that many teachers who were appointed directly as junior BT teachers in Middle schools in 2004 to 2006 had even M.phil, and M Ed degrees, and were well versed in all academic sphere.They are still working in middle school without any grudging while their countr parts appointed got promotions in high schools.They deserve more than this.They are not the promted teachers.

   Delete
  2. Should be selected from exams.because many middle school bts are selected from employment seniority and promotion. There is a doubt about them who are eligible for handling higher secondary subjects. So should be based on exam

   Delete
 7. இதில் தான் அந்த part time teacher பயித்தியம் message போடவில்லை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி