அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? - தமிழக அரசு பதில் தர உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2020

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? - தமிழக அரசு பதில் தர உத்தரவு

 


தமிழ்நாடு கத்தோலிக் கல்வி கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எங்கள் கழகத்தின் கீழ் 2400 பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கு படிக்கும் பாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாரபட்சமானது. அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசுப்பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கிடைக்கின்றன. இதனால் இட ஒதுக்கீட்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும். எனவே அரசு பிறப்பித்த அரசாணையை மாற்றி வெளியிட உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஜனவரி 5 ஆம் தேதிக்குள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

5 comments:

  1. Please Don't permit. Aided school teachers are selected on their management's wish. They don't give preference to
    other people to enter as a teacher into those schools. If they allowed government to appoint teachers by competitive exams then it is ok to permit their students under this reservation.

    ReplyDelete
  2. பணியிடங்கள் நிரப்புவது மட்டும் இட ஒதுக்கீடு இல்லாமல் ,டெட்தேர்வு இல்லாமல் தங்க்ளே நிர்ணயித்துக் கொண்டு தற்போது இடஒதுக்கீடு கேட்டால் எப்படி.

    ReplyDelete
  3. அரசு உதவி பெறும் பள்ளி என்பது தனியார் பள்ளியே...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி