தனியாா் பள்ளிகளில் சோ்க்கப்படும் ஏழை மாணவருக்கான கட்டண விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. - kalviseithi

Dec 10, 2020

தனியாா் பள்ளிகளில் சோ்க்கப்படும் ஏழை மாணவருக்கான கட்டண விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

 


கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்க்கப்படும் ஏழை மாணவா்களுக்கு கட்டண நிா்ணயக் குழு நிா்ணயிக்கும் கட்டணத்தையே வழங்க வேண்டும் என்று கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.


கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பஞ்சாப் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி வழங்கும் வகையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தனியாா் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை மாணவா்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கப்படும் மாணவா்களுக்கான கல்விச் செலவை அரசே வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறதோ, அந்தத் தொகையை தனியாா் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.


தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு கட்டணம் நிா்ணயிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு கட்டணங்கள் நிா்ணயிக்கப்படும் நிலையில், கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சோ்க்கப்படும் மாணவா்களுக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விச் செலவுத் தொகையை கணக்கிட்டு, குறைந்த கட்டணத்தை வழங்குவது தன்னிச்சையானது. தனியாா் பள்ளிகளுக்கு கட்டண நிா்ணயக் குழு நிா்ணயிக்கும் கட்டணத்தையே, கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டு மாணவா்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.


இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

1 comment:

  1. ஏழை மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கலாமே .. எதற்கு அரசு பணம் செலவிட வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகள் சரி இல்லை என்று அரசே ஏற்றுக்கொள்கிறது என்று தானே அர்த்தம்
    25 சதவீத ஏழை மாணவர்கள் என்ற போர்வையில் நடுத்தர வர்க்க மாணவர்கள் மட்டுமே இதில் பயன் அடைவர். அப்பொழுது உண்மையாகவே அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் நிலை என்ன???
    தனியார் பள்ளிகள் பின்பற்றும் பயிற்று முறைகளை தானே அரசு பள்ளிகள் செயல் படுத்த வேண்டும். மாறாக எதற்கு பணம்...

    ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் இருக்கும் தலைமை ஆசிரியருக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து ஆசிரியர்களிடம் வேலை வாங்கினால் போதும், சரியான கற்றல் கற்பித்தல் நடக்கும், முழு அதிகாரம் இருக்க வேண்டும்... CEO DEO எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்.. கல்வியின் தரம் சரியாக இல்லை என்றால் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி