NMMS தேர்வில் 2016-17 கல்வி ஆண்டு முதல் 2019 - 20 கல்வி ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை NSP Portal ல் பதிவேற்ற இயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2020

NMMS தேர்வில் 2016-17 கல்வி ஆண்டு முதல் 2019 - 20 கல்வி ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை NSP Portal ல் பதிவேற்ற இயக்குநர் உத்தரவு


கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , இக்கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியரின் விவரங்கள் National Scholarship Portal இல் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியை 31 டிசம்பர் 2020 க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் , தேர்ச்சி பெற்ற 6695 மாணவ மாணவியரில் 04 டிசம்பர் 2020 வரை 6339 மாணவ மாணவியரின் தகவல்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இதே போன்று , கடந்த 3 ஆண்டுகளில் NMMSS உதவித்தொகை பெற்றுவரும் அதாவது இந்த கல்வியாண்டில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் படித்துவரும் NMMSS உதவித்தொகைக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் மாணவர்களின் National Scholarship Portal ல் உதவித்தொகைக்கான Renewal செய்யும் பணியும் இன்னும் முழுமை பெறாமல் , 13492 மாணவர்களுக்கு 12598 மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே 04 டிசம்பர் 2020 வரை Renewal செய்யப்பட்டுள்ளது . இப்பணியையும் 31 டிசம்பர் 2020 க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.


Dir proceeding - Full Details Download here...



1 comment:

  1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
    PGTRB2021 regular and online class..
    நடைபெற்று வரும் பாடங்கள்..
    COMMERCE And
    TNEB accountant.
    Study materials also available.!

    Admission நடைபெறும் பாடங்கள்..
    TAMIL
    ENGLISH
    MATHEMATICS
    PHYSICS
    CHEMISTRY
    BOTANY
    ZOOLOGY..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி