CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் 18.12.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2020

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் 18.12.2020

 


அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் , வணக்கம் , 


தமிழ்நாட்டில் 01.04.2003 முதல் தமிழக அரசுப் பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துப்பட்டுவருகிறது . இத்திட்டத்தினால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் பணிக்கொடை மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித பலனுமின்றி வாழ்வாதாரம் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பது 2016 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாகவும் இடம் பெற்றிருந்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டதையே மீண்டும் நடைமுறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்று 6 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்கள் சார்பான நமது வேண்டுகோளின் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனம் ஈர்க்கப்பட அனைவரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்.


மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் CPS ஒழிப்பு இயக்கம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி