மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஈப்பு வாகனத்தை (Jeep) உரிய அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2020

மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஈப்பு வாகனத்தை (Jeep) உரிய அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்!

 


சென்னை - 6 , பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக , இணை இயக்குநர் திரு சி.செல்வராஜ் அவர்கள் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர் மூலம் , முன் அனுமதி பெறாமல் மற்றும் முன் அறிவிப்பு ஏதுமின்றி பழனி , மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஈப்பு ( TN 57 G 0834 ) வாகனத்தைப் பயன்படுத்துவதாக புகார் பெறப்பட்டுள்ளது . இதனால் பழனி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மையங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கும் , பள்ளிகளின் பார்வைக்கு செல்ல இயலாத நிலையில் சிரமமான சூழ்நிலை உள்ளது என்றும் பார்வையில் காணும் நேர்முக கடிதத்தில் பழனி மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே , இனி வரும் காலங்களில் மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஈப்பு வாகனத்தை உரிய அலுவலர்கள் மட்டுமே பயன்படுத் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இனி வருங்காலங்களில் இது போன்ற புகார்களுக்கு இடம் கொடாமல் செயல்படுமாறு உரிய அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

1 comment:

  1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
    PGTRB2021 regular and online class..
    நடைபெற்று வரும் பாடங்கள்..
    COMMERCE And
    TNEB accountant.
    Study materials also available.!

    Admission நடைபெறும் பாடங்கள்..
    TAMIL
    ENGLISH
    MATHEMATICS
    PHYSICS
    CHEMISTRY
    BOTANY
    ZOOLOGY..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி