பிப்ரவரி 1-ம் தேதி முதல் 9-12 ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2021

பிப்ரவரி 1-ம் தேதி முதல் 9-12 ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு.


 பிப்ரவரி 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நெருங்குவதால் கட்டாயம் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 


இதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கத் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை அவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதேபோல இன்டர்மீடியட் கல்லூரிகள் மற்றும் டிகிரி கல்லூரிகளுக்கும் பிப்.1 முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துபேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 1-ம் தேதி முதல் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி