புதிதாக பணியேற்கவுள்ள கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைதான் புரோகிராமிங் (Python Program) பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2021

புதிதாக பணியேற்கவுள்ள கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைதான் புரோகிராமிங் (Python Program) பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



பொருள் : பள்ளிக் கல்வி அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள கணினி ஆசிரியர்களுக்கு பைதான் புரோகிராமிங் ( Python Program ) பயிற்சி அளித்தல் - சார்பு . பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் . 8101 / M2 / இ 1 / 2019 , நாள் , 30.12.2020 . மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராமிங் ( Python Program ) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக , அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள கணினி ஆசிரியர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு Faculty Development Workshop on ' Problem Solving Using Python ' திட்டமிடப்பட்டுள்ளது . மேலும் , பைதான் புரோகிராமிங் ( Python Program ) மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது . மாணவர்கள் உயர்படிப்பில் திறமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் திறன் மேம்படுத்திட மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் சுமார் 300 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிட ஊக்குவிக்கும் வகையில் Bootcamp நடத்தப்பட உள்ளது . பைதான் புரோகிராமிங் ( Python Program ) ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால் , இந்த Bootcamp மூலம் ஆசிரியர்கள் , திறமையான மாணவர்களை உருவாக்க முடியும் . மேலும் , Web Developing . Data Analysis , Artificial Intelligence மற்றும் Machine Learing and Scientific Computing போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க ஏதுவாக Bootcamp பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது . ஆசிரியர்களுக்கான Bootcamp 12 நாட்களுக்கு காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை Amphisoft நிறுவன வல்லுநர்களின் நேரடி விரிவுரைகள் மூலம் நடைபெறும் . அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் ( Online Practice Session ) நடைபெறும் .


Click here to download pdf

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி