நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் , 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு. - kalviseithi

Jan 12, 2021

நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் , 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.


புதியதாக தொடங்கப்படும் 25 தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான 25 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 25 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் , இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட ஆசிரியரின்றி உபரியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை இணைப்பு -1 ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது . தரம் உயர்த்தப்படும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு , பள்ளி ஒன்றிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி தலைமையாசியர் ( நிலை 17 ரூ .36,700 -116200 ) மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் ( நிலை 16 , ரூ .36400 -115700 ) வீதம் , 10 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தியும் , 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட உபரி பணியிடங்களிலிருந்து இணைப்பு - 2 ல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது . இவ்வாறு மாற்றி வழங்கப்படும் 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பாடவாரியான சுழற்சி முறையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் முதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் , அடுத்தடுத்து வரும் 2021-22 மற்றும் 2022-23ஆம் கல்வியாண்டுகளில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும் . இதனைத் தொடர்ந்து புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குவதற்கும் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் குறித்தும் கீழ்கண்டுள்ளவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்

11 comments:

 1. Employment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
  தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
  ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்

  ReplyDelete
  Replies
  1. TET தேர்ச்சிப்பெற்ற அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே

   Delete
  2. Tet mark vachu posting podalam
   No seniority
   Seniority sethu poi rompa varusam achu

   Delete
 2. Good idea. But posting podanume

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி