தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு - மத்திய அரசு - kalviseithi

Jan 28, 2021

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு - மத்திய அரசு

 

கொரோனா வைரஸ்  பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.


இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.


இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கண்டெய்ன்மெண்ட் சோன் எனப்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  


இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தலாலே முன்னெச்சரிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி