2 % ஒதுக்கீட்டு அடைப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக பணியாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு. - kalviseithi

Jan 30, 2021

2 % ஒதுக்கீட்டு அடைப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக பணியாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.

 


பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களுக்கு 2 % ஒதுக்கீட்டு அடைப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக பணியாளர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. இப்பெயர் பட்டியலில் உள்ள பணியாளர்களின் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்திடவும் , இப்பெயர் பட்டியலில் சேர்க்கை , நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் இருப்பின் பார்வையில் காண் அரசிதழின்படி வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி அளித்திடவும் மற்றும் இவ்விதியில் " Must have obtained a Bachelor's degree and Master's degree in the same subjects or their equivalent in respect of which recruitment is made. " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு எந்தப்பாடத்திற்கு முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பட்டியலில் சேர்க்கப்படுகிறாரோ அப்பணியாளர் அப்பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலையில் முதன்மைப் பாடமும் மற்றும் பி.எட் . பயின்றிருக்க வேண்டும்.


Panel List And Proceedings - Download here....8 comments:

 1. அரசு இவ்வளவு செய்கிறது..... பின்னர் ஏன் இந்த ஆசிரியர்கள் போராட்டம் செய்கின்றனர்.... 97000 சம்பளம் போதவில்லையா..... தனியார் பள்ளியில் 13000 சம்பளத்துக்கு பல ஆசிரியர்கள் உயிரை கொடுத்து பாடம் எடுக்கின்றனர்..... அரசு பள்ளியில் அவ்வளவு சம்பளம் வாங்கிட்டு என்னத்த பாடம் எடுக்கின்றனர்..... இதில் வேடிக்கை என்னவென்றால் அறிவியல் பாடத்துக்கு பாடங்கள் அதிகம் உள்ளன என்று கூறுவது தான்.... பின்னர் எப்படி அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு தேர்ச்சி அடைய முடியும்..... இனி போராட்டம் செய்தால் 97000 சம்பளம் வாங்கும் ஆசிரியர்களை தூக்கி விட்டு 40000 தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு நியமிக்கலாம்..... அவர்கள் அரசு பள்ளி ஆசிரியரை விட தரமானவர்கள்..... அரசுக்கும் பேரும் பணம் மிச்சமாகும்..... ஒரு மாணவனாக என்னோட karuthu..... இதனை சற்று எல்லாரும் ஆதரித்தால் நல்லது....

  ReplyDelete
  Replies
  1. நீ மூடிட்டு போ வக்கு இல்லாத...


   Delete
  2. 97000?adapavikala.Enka hm enoda salary 50000 a kuraichu vanki kudukirar.

   Delete
  3. Teachers salary therinchitu comment panunga pls

   Delete
 2. தனியார் 🏫 பணியாற்றி பிறகு அரசுப் பணிக்கு வந்தவன் நான் அதிகம் சம்பளம் தான் படித்த படிப்புக்கு சம்பளம் கேட்கத்தான் செய்வோம் உனக்கு திறமை இருந்தால் நீயோ உன் பிள்ளையோ வேலைக்கு வா

  ReplyDelete
  Replies
  1. TET,PG.Trb போன்ற தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற உங்களுக்கு துப்பில்லை. மேலும் தனியார் பள்ளிகள் உங்களை சுரண்டி அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதை எதிர்ப்பதற்கு உங்களுக்கு திராணி இல்லை இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பற்றி பேச வருகின்றீர்கள். தற்போதைய காலங்களில் கட்டிடப் பணி செய்யக்கூடிய ஒரு கொத்தனாரும் ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 1000 பெறுகிறார் அதாவது மாதம் 30 ஆயிரம் ரூபாய் பெறுகிறார் ஆனால் நீங்களோ முதுகலைப் பட்டமும் B.ed ம் படித்த பின்பும் 13 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறேன் என்றால் அது யாருடைய தவறு... முதலில் ஒன்றை கூறிக் கொள்கின்றேன் ஒருவருடைய நிலையை பார்த்து நீங்கள் பொறாமை கொள்கின்றீர்கள் என்றாலே நீங்கள் ஆசிரிய தகுதியற்றவர்கள் என்று கருத வேண்டும் ...

   Delete
 3. மத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.

  ReplyDelete
 4. மத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி