ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பு, இரண்டு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.இந்நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்கிஉள்ளன.
மாணவ - மாணவியர் முக கவசம் அணிந்து, வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.இதையடுத்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்., 1 அல்லது 2ல், நேரடி வகுப்புகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், இன்று அல்லது நாளை, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
Welcome
ReplyDelete9 மற்றும் 11 வகுப்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டாதா? பொது தேர்வு என்பதால் 10 மற்றும் 12 வகுப்பு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். இன்னும் கல்லூரி இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திறக்கவில்லை. இந்த நிலையில் ஏன் பள்ளி மாணவர்களுக்கு அவசரமாக திறக்க வேண்டும்?
ReplyDeletePoda
ReplyDeleteEngaluku corona vandhal mr.sengottaiyan avargal 1000000 kodupar endru arivipu varatum palliku varugirom
ReplyDeletesetthutta unga velai innoru alukku kidaikkum, kaasu kooda kuduppaanga
DeleteSchool thurundlum nanga varamatom
ReplyDeleteமத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.
ReplyDelete