ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2021

ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 

The Regional Institute of English , South India ( RIESI ) மூலமாக , ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு 15.02.2021 முதல் 16.03.2021 வரை 30 நாட்கள் பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும் , இப்பயிற்சிக்கு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு , தங்கள் மாவட்டத்தில் , தொடக்கப்பள்ளி நிலையில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை ( ஏற்கனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் ) ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் தெரிவு செய்து , RIESI Bangalore- லிருந்து பெறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ( இணைக்கப்பட்டுள்ளது ) விதிமுறைகளைப் பின்பற்றி , ( சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விருப்பக் கடிதத்துடன் ) தேர்ந்தெடுத்து கீழ்க்கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ( MS - Excel Format- ல் ) deesection.exmail.com என்ற மின்னஞ்சலுக்கு 29.01.2021 க்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



இது மிகவும் அவசரம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி