மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களைப் பெற ஜன .5 - க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களைப் பெற ஜன .5 - க்குள் விண்ணப்பிக்கலாம்


முதுகுத் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளி களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற ஜன .5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி : தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , முதுகு தண்டு வடத் தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க ஆணை வழங்கியுள்ளது . கால்களில் முழுமையாக வலு இல்லாத முதுகு தண்டு வடம் ( கழுத்து முதுகு , இடுப்பு ) பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம் . சென்னை , தேனாம்பேட்டைடிஎம்எஸ் வளாகம் , வனத்துறை அலு வலக தரைத்தளத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஜன .5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி