9 ,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது ? ஆட்சியர்கள் , மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2021

9 ,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது ? ஆட்சியர்கள் , மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

 


கொரோனா நோய் தொற்று காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன இந்நிலையில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது ? மற்றும் கரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 


தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 11 மணிக்கு ஆட்சியர்களுசன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்.


இதனைத்தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மதியம் மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 


பின்னர் மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 


பி.2 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி. 


இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் மற்றும் அரசியல் விவகாரங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

5 comments:

  1. இந்த ஆட்சி அமைந்தால் பி.எட் படித்த FRESHERS -க்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். சீனியாரிட்டியில் வேலை கிடைக்கும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். ஆக மொத்தம் படித்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இவர்களது நியமனங்கள் அனைத்தும் 7000 8000 என்ற அவுட்சோர்சிங் முறையிலேயே நடைபெறுகிறது. வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவரையும் கொத்தடிமைகளாக வைத்து நியமிக்கும் வேலையை செய்து ஏழைகளின் அரசுப் பதவி கனவைத் தகர்த்துவிட்டது இந்த அரசு இந்த 10 வருடங்களில்…..விரைவில் … விரைவில் … இந்த மாத இறுதிக்குள்…. இன்னும் இரண்டு வாரத்தில் …. என்று சொல்லிச் சொல்லியே பி.எட் படித்தவர்களின் பத்தாண்டு கனவு தகர்ந்துவிட்டது…

    ReplyDelete
  2. இந்த ஆட்சி அமைந்தால் பி.எட் படித்த FRESHERS -க்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். சீனியாரிட்டியில் வேலை கிடைக்கும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். ஆக மொத்தம் படித்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இவர்களது நியமனங்கள் அனைத்தும் 7000 8000 என்ற அவுட்சோர்சிங் முறையிலேயே நடைபெறுகிறது. வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவரையும் கொத்தடிமைகளாக வைத்து நியமிக்கும் வேலையை செய்து ஏழைகளின் அரசுப் பதவி கனவைத் தகர்த்துவிட்டது இந்த அரசு இந்த 10 வருடங்களில்…..விரைவில் … விரைவில் … இந்த மாத இறுதிக்குள்…. இன்னும் இரண்டு வாரத்தில் …. என்று சொல்லிச் சொல்லியே பி.எட் படித்தவர்களின் பத்தாண்டு கனவு தகர்ந்துவிட்டது…

    ReplyDelete
  3. Puthagasalai admin sariya kedi pola. Avanga solra concept ku opposite ah command pottal udane black panniduranga.... Avangalukku jalra poda oru 4 per irukanga...

    ReplyDelete
    Replies
    1. Swetha, shanmugam, trt2021, HEMA, Evanga ellarum Anu oda fake I'd,s

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி