பிப்.2-ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2021

பிப்.2-ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.

 


சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பிப். 2-ம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பள்ளிகள் செய்முறை தேர்வுகளை மார்ச் 1-ம் தேதி முதல் நடத்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்கள் தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகளுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று இணையவழியில் கலந்துரையாடினார். அப்போது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்.2-ம் தேதிவெளியிடப்பட உள்ளதாகவும், கல்விக்கொள்கையின் அடிப்படையில் 250 சிபிஎஸ்இ பள்ளி வளாகங்களில் மாற்றங்கள் செய்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி