தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ - kalviseithi

Jan 6, 2021

தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ

 

இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறோம். தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது.


மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு 404 மாணவர்களுக்கு ரூ.16 லட்சத்து 33 ஆயிரம் செலவில் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-


ஏழை, எளிய மாணவர்கள் வாழ்வில் வளம்பெறவும், கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தான் விலையில்லா சைக்கிள் உள்பட 16 வகையான உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளுடன் ஒப்பிடும்போது பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் நான்கில் ஒரு பங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 99.88 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறோம். மேலும் உயர்கல்வி சேர்க்கை 49.6 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.


மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டு நாள்தோறும் ஒளிபரப்பப்படுகின்றது.


இவ்வாறு அவர் கூறினார்.


இதேபோல் மதுரை அருகே பரவை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், முன்னாள் பேரூராட்சி தலைவர் பரவை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன் வரவேற்றார்.


விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் திரவியம், செயல் அலுவலர் சுந்தரி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சவுந்தர பாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் பங்கஜம் நன்றி கூறினார்.

16 comments:

 1. B.Ed seniority வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதன் சீனியாரிட்டி படி ,TET தேர்ச்சி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. 2017 வருடத்தில் சர்திஃபிகேட் வெரிஃபிகேஷன் முடித்தும் பணி வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் இன்று நாளை என்று ஒவ்வொரு நாளும் அலைக்கழிக்கும் இந்த அரசை நாம் அலைக்கழிக்க செய்ய வேண்டும்

   Delete
  2. படிப்பின் அருமை படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்

   Delete
 2. Replies
  1. கனவு காணுங்கள். ஆனால் அமைச்சராக வர முடியாது

   Delete
  2. Comedy pannen adhu kooda theriyala ungalukku.

   Delete
 3. Yes sleuraj comdey fees admk ministears

  ReplyDelete
 4. மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் ஆசிரியர்களை மட்டும் பணிநியமனம் செய்யாமல் கடந்த ஏழு வருடங்களாக வெற்று அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் ஆளும் அரசு.

  ReplyDelete
  Replies
  1. 2013ம் ஆண்டு வரை முழுவதுமாக நிரப்பா விட்டாலும் நியமனம் என்ற ஒரு சிறிய செயலாவது நடந்தது ஆனால் 2017 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் வென்றும் இன்று வரை எந்த நியமனமும் செய்யவில்லை யார் தட்டி கேட்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலை தந்து ஆசிரியர்களின் மனநிலையை குழப்பிக் கொண்டே இருக்கிறது இந்த அரசு இன்று நல்ல செய்தி வரும் நாளை நல்ல செய்தி வருமா என காத்துக் கொண்டிருக்கும் நம் வேதனையை கண்டிப்பாக இந்த அரசு புரிந்து கொள்ளாது

   Delete
  2. அனைத்து அரசியல்வாதிகளுக்கும் கல்வியை ஒரு தகுதியாகவும் இந்திய அரசியலமைப்பில் ஒரு தேர்வும் வைத்து அதன்பின்பு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.

   Delete
 5. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  ReplyDelete
 6. Neenga epo tet pass candidate ellarukum job podunga

  Manga admission kondu varom government schools Ku

  Because engala epo private school la veedu veeda poi canvas panni admission poda solranga

  Athukum Mela engala government schools Ku studentsa kondu Vara mudiyum

  ReplyDelete
 7. இங்கு பதிவிடும் அனைவரும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு / தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மனுக்கள் அனுப்பி விடுங்கள்.

  ReplyDelete
 8. இவன் எப்போ கல்வி அமைச்சர் ஆனான். தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை டா

  ReplyDelete
 9. இவன் எப்போ கல்வி அமைச்சர் ஆனான். தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை டா

  ReplyDelete
 10. முட்டாள் பயன் நாயே

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி