புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - kalviseithi

Jan 21, 2021

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.


ஆசிரியர் தேர்வு:


கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் அதிகளவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இருமடங்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.


இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நியமனம் செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார்.

30 comments:

 1. Replies
  1. அரசு கலை கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் சார்ந்த பணிகள் இரகசியமாக நடைபெறுகிறது. அவற்றில் வேண்டப்பட்டவர்களுக்கு முன்னுரிமை..இவையெல்லாம் கௌரவ விரிவுரையாளர்களின் மின்னஞ்சல் வழியாக கேட்டுபெற படுகிறது..ஏன் இந்த ரகசிய வேலை, யாரை காப்பாற்ற இந்த வேலை? யார் இவற்றை கேட்பது, முதலமைச்சர் ஒப்புக்கொண்டாரா என்பது தெரியவில்லை, கல்வியாளர்கள் இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டால் இனி வரும் காலங்களில், இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும், வெளியில் இருப்பவர் வெளியிலேயே இருப்பார்கள், கௌரவ விரிவுரையாளர்கள் சொம்பு தூக்கி வேலையை பெறுவதை யாராலும் தடுக்க முடியாது...

   Delete
 2. தகுதித்தேர்வு அட்டவணையா? நியமனத் தேர்வு அட்டவணையா? PG TRB தேர்வு அட்டவணையா? இல்ல அனைத்து தேர்வுமா? இத்தனை தேர்வும் காலம் கடந்த நேரத்தில் நடத்துவது உங்கள் வாக்குவங்கி பாதிக்காத. இந்த தகவல் தங்கள் ஆட்சியில் மதுக்கடையை படிப்படியாக முடுவதாக கொடுத்த வாக்குறுதியை போல் உள்ளது. தற்போது ஆசிரியர்கள் பணி, எட்டா கனிக்கு சமம். நன்றி....

  ReplyDelete
 3. அமைச்சர் அவர்கள் தயவுகூர்ந்து இப்படி சொல்லி சொல்லி எங்களை எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி தாங்கள் சொன்னதை மறந்து விட்டு மீண்டும் இதே வசனத்தை தொடர்வீர்கள் ஆதலால் தயவு கூர்ந்து இப்படி மாணவர்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப ஆசிரியர் வேலை போடப் போகிறோம் என்று சொல்லி சொல்லி எங்களை ஏமாற்ற வேண்டாம் இப்படிக்கு தங்கள் ஆட்சியால் வேலை இழந்த ஆசிரியர்

  ReplyDelete
 4. தேர்வு அறிவியுங்கள்,மேலும் இந்த அரசின் மீதான கோபம் அதிகறிக்கட்டும்,தேர்ச்சி பெற்ற ஆசிரியர் களுக்கே பணி கொடுக்க முடியாத அரசு

  ReplyDelete
 5. Replies
  1. 2013 neenga than ellathukkum Karanam ungalukku ethana thadava job poduvanga 😤😤😤

   Delete
 6. நம் கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும்

  ReplyDelete
 7. ஆரம்பிச்சுட்டரா😆😆

  ReplyDelete
 8. Kadaulukku kannu irukka illaiya bed pass tet pass innum unga achila thukku mati than nangaellam saganum

  ReplyDelete
 9. 2013 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படுமா

  ReplyDelete
 10. 2017 ku oru posting kooda podala

  ReplyDelete
 11. ஆசிரியர் பணிக்கு படித்தவர்களை முட்டாள் ஆக்குவது தான் இவரது வேலை பார்ப்போம் இன்னும் எத்தனை நாட்களுக்கு மே மாதம் வரை தானே ஆசிரியர்களின் வாழ்க்கையே இவர்களுக்கு அரசியல் ஆகிவிட்டது

  ReplyDelete
 12. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலைமை கல்வி அமைச்சருக்கு எப்போது புரியபோகிறது இப்படி சொல்லியே பல ஆண்டுகள் கடந்தாச்சு. இனிமேல் தான் இவர்களுக்கு ஆசிரியர் தேர்வு அட்டவணையை வெளியிட போகிறார்களாம். நல்ல தரமான & உடனடியான நடவடிக்கை ஐய்யா 🙏

  ReplyDelete
 13. Only posting for 2013tet high mark scored people no job for 2017and 2019

  ReplyDelete
  Replies
  1. High mark means how much sir.

   Delete
  2. ஒற்றுமையாக போராடி வேலை வாங்க வேண்டிய நேரத்தில் 2013க்கு மட்டும் வேலை வேண்டும் 2017 2019 வேலை இல்லை என்றால் அப்போ கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்ற அனைவரும் முட்டாளா அல்லது ஏமாளிகளா சுயநலமாக வாழ வேண்டாம் தயவுகூர்ந்து தன்னைப் போல் தான் அடுத்தவருக்கும் கனவு இருக்கும் என்பதை மறக்க வேண்டாம் சுயநலம் பிடித்த உலகத்தில் சுயநலமாக வாழ்வதை தவிர்த்து சரிசமமாக சிந்தித்து சிறப்புடன் வாழ பழகுவோம்

   Delete
 14. அப்படி எவ்வளவு மார்க் எடுத்து தமிழகத்திலேயே முதல் இடம் பிடித்து விட்டீர்களா சுயநலம் தவிர்

  ReplyDelete
 15. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு எப்போது

  ReplyDelete
  Replies
  1. அவன் அவன் வேலை இல்லைனு புலம்புகிட்டு இருக்கான்.. உனக்கு transfer தான் இப்ப முக்கிய மா??? வேற site ku போய் கேளு...

   Delete

 16. 2013 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்

  ReplyDelete
 17. 103.marks tet passed paper2 2013.tamil

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி