வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு! - kalviseithi

Jan 21, 2021

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு!

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


01.01.2021 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.அதாவது, வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ”Voter Helpline App” என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புத்தகம், குடிநீர் இணைப்பு பில், தொலைபேசி இணைப்பு பில், ரேசன் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவைகளை ஆதாரமாக கொடுத்து பயன்பெறலாம்.


பிறந்த தேதி ஆவணமாக, பிறந்த நாள் சான்றிதழ் அல்லது 5 ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவைகள் கொடுக்கலாம் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி